Daily Archives: April 4, 2020

இந்திய ஹாக்கி விளையாட்டு அமைப்பு மேலும் ரூ. 75 லட்சம் நிதி உதவி

கொரொனா தடுப்புக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு உதவலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, பிரபல டாடா, ரிலையன்ஸ், மகேந்திரா, விப்ரோ, விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் அரசியல்வாதிகள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஏற்கனெவே ரூ. 25 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்திருந்த இந்திய ஹாக்கி அமைப்பு,தற்போது இன்று மேலும் ரூ. 75 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது. எனவே ஹாக்கி அமைப்புமொத்தம் ரூ. 1 கோடி வழங்கியுள்ளது.

விஜய்சேதுபதியுடன் இணையும் படத்துக்காக… வழி விடுமா காலம்…சேரன் டுவீட்

சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்..என தெரிவித்துள்ளார். சேரனின் பதிவிற்கு, அவரது ரசிகர் ஒருவர், காலம்..நேரம் விரைவில் கைகூடும் சார்…கிழக்குசீமையில் உதித்த பாசமலர் போன்ற படைப்பாக வரப்போகும் அவ்வுயர் படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்..

திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு: பீலா ராஜேஷ்

திருச்சி: திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை முன் கூட்டியே தினகரன் நாளிதழில் தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார்.

மக்களை கைதட்ட, டார்ச் அடிக்க சொல்வதாலோ பிரச்சனை தீராது….ராகுல் காந்தி ட்விட்

புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072-ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 213 பேர் குணமடைந்தனர்.

மதுரையில் சரக்கு ஏற்றிச் செல்ல பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி

மதுரை: சரக்கு ஏற்றிச் செல்ல பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்து ஆட்சியர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சரக்குகளை மறுநாள் காலை 6 மணிக்குள் அனுப்பிட வேண்டும். மதுரை சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஃபெப்சிக்கு ரூ.20 லட்சம்: நடிகை நயன்தாரா

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  படப்பிடிப்புகள் முடங்கியுள்ளதால், 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல முன்னணி நடிகர்கள் நிதி உதவி அளிக்க முன்வந்தனர்.  அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா தமிழ்நாடு சினிமா தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சிக்கு…

1 2 3