Daily Archives: April 11, 2020

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்

கொரோனா ஓழிப்பு நடவடிக்கைக்கு ஓசூர் பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தங்கை தங்களது சிறுசேமிப்பு தொகையை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர். கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஏற்று, ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் ஓசூர் நேதாஜி சாலையைச் சேர்ந்த வினய் என்பவரின் மோஹீத்(9) மற்றும் அவரது தங்கையான எல்கேஜி படிக்கும் சாத்விகா(3) ஆகிய சிறுவர்கள், தாங்கள் வீட்டில் பிக்கி பேங்க்(உண்டியல்) மூலம்…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,666 பேர், தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239-லிருந்து 242 – ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிப்பில் இருந்து 653 பேர் குணமடைந்துள்ளனர்

ஈகோ பார்க்காமல் ஏழைகளின் வயிற்றுக்கு உதவுமா மோடி அரசு?

முன்னாள் நிதிமைச்சர் ப. சிதம்பரம் சொல்லி இருக்கும் கருத்து முக்கியமானது. வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குடும்பங்களுக்கு, தலா ரூ.5,000 கொடுத்தால், ரூ. 65,000 கோடிகள் செலவாகும். அதை தரவேண்டும் என்கிறார். அது 13 கோடி குடும்பங்களுக்கு போகலாம். சராசரியாக 3 (அ) 4 பேர்கள் இருக்கும் ஒரு குடும்பம் என்று வைத்து கொண்டால், இந்த ரூ.5,000, 39 – 52 கோடி வயிறுகளை காப்பாற்றும். அது மொத்த இந்திய மக்கள்தொகையில் சற்றேறக் குறைய 30-35%. இதையே…

தமிழகத்தில் ஆறே நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும்…

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்கள், நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், மருத்துவமனையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

சேலம் ஆத்தூர் அருகே தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆலையில் விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தந்தை ஆறுமுகம், மகன் கார்த்திக் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 22-வது இடம்

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 22-வது இடத்தை எட்டியுள்ளது. ஊரடங்கு அறிவிப்புக்கு முன் 60 நாடுகளுக்கு பின்னால் இருந்து இந்தியா தற்போது 22 இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447-ஆக உள்ளது.