Daily Archives: April 30, 2020

பிரபாகரன் வென்ற யுத்தங்கள் எத்தனை?

பிரபாகனை மாவீரன் என்றும், தமிழினத்தை காக்க வந்த தலைவன் என்றும் அவருக்காக தமிழகத்தில்தான் இன்னும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாய்க்கு பிரபாகரன் பெயர் வைக்கப்பட்டதை நடிகர் துல்கர் சல்மான் கிண்டல் செய்தாராம். தமிழ்தேசியவாதிகள் பொங்குகிறார்கள். அவர் கிண்டல் செய்ததில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். நாய்க்கு ஒருவேளை ஒரே ஒரு பிஸ்கட் போட்டாலும், போட்டவனுக்கு அது விசுவாசமாக இருக்கும். ஆனால், பிரபாகரன் தனக்காக பிள்ளைகளை அனுப்பிய தமிழர்களுக்கு செய்தது என்ன? தமிழர்கள் என்றால் தமிழ்பேசும் எல்லோரையும் தமிழர்களாக நினைத்திருக்கிறாரா…

நீலநிற இதயம்!

விண்வெளியில் இருந்து பார்த்தால் நமது பூமி நீலநிற ரத்தினக்கல் போல ஜொலிக்கும். நமது பூமியை நீல நிறத்தில் மாற்றுவது எது? நான்கில் மூன்று பங்காய் பரந்திருக்கும் கடல்தான். நமது கடலில்தான் முதல் உயிரினம் தோன்றியது. இப்போதும் கணக்கில் அடங்காத அளவுக்கு உயிரினங்கள் கடலில் அடைக்கலமாகி இருக்கின்றன. இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் கடல்வாழ் உயிரினங்களை கணக்கிட்டுள்ளனர். இது மிகவும் குறைவானது. மொத்தத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான கடல்வாழ் உயிரின வகைகள் இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர். பூமியின்…

பாலூட்டிகளின் தொடக்கம்!

பூமியில் பாலூட்டி இனம் மிகப்பெரியது. திமிங்கலங்கள், யானைகள், நாய்கள், வவ்வால்கள் ஏன் நாம் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொப்பூழ்கொடி உறவுடன் கூடிய பாலூட்டி விலங்குகள் உள்ளன. இந்த பாலூட்டி இனத்தின் முதல் விலங்கு எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சி நெடுங்காலமாக நீடித்து வந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம், நாம் உள்பட பாலூட்டி இனத்தின் முதல் விலங்கு சில நூறு கிராம்களே எடையுடன் கூடிய பூச்சிகளை உண்ணும் ஒரு சிறிய பிராணிதான் என்று…

தோல் அணுக்களை மாற்றி….!

மூளை மற்றும் முதுகுத்தண்டுக்குள் செல்லும் நரம்புகளை மைலின் என்ற கொழுப்பு உறை பாதுகாப்பாக மூடியுள்ளது. தண்டுவட மரப்பு நோய் அல்லது மல்ட்டிப்ள் ஸ்க்லெரோசிஸ் என்ற நோய் இந்த உறையை சேதப்படுத்துகிறது. இதையடுத்து, இந்த நரம்புகள் சமிக்ஞைகளை அனுப்ப முடியாமல் சிரமப்பட்டன. எனவே, பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த சேதத்தை சரிசெய்ய இதுவரை வழியில்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நோயாளியின் சொந்த தோலைக் கொண்டு இந்த சேதத்தை சரிசெய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.…

ஆகஸ்டில் கல்லூரி தொடக்கம்: யூஜிசி தகவல்

கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம் என்றும் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் யூஜிசி அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு குறித்த இந்த அறிவிப்பு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு இன்றி இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேடு வழங்கலாம் என்றும் இன்டர்னல் மதிப்பெண்கள் 50 சதவிகிதமும், முந்தைய பருவ தேர்வு மதிப்பெண்கள்…

நடிகை ஜோதிகா குறிப்பிட்டுப் பேசிய மருத்துவமனையில் பிடிபட்ட பாம்புகள்…

நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை, முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று பேசியது, தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா, தன் மனைவி கூறிய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஆன்மீகப் பெரியோரின் எண்ணங்களைத் தான் ஜோதிகாவும் கூறினார், அவர் கூறிய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என அதில் தெரிவித்திருந்தார். அதில் விவேகானந்தர், திருமூலர் போன்ற மகான்களின் கருத்துகளை மேற்கோள்காடியிருந்தார்.…

கிம் உயிருடன் இருக்கிறார்! ஆனால் நடக்க முடியாது! – முன்னாள் தூதரக அதிகாரி பேட்டி!

கடந்த 11ம் தேதிக்கு பிறகு பொதுவெளியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தென்படாத நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு எழுந்த சூழலில் தென்கொரியா இந்த செய்திகளை மறுத்துள்ளது. மேலும் கிம் நலமுடன் இருப்பதாகவும் அது தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் வட கொரொயாவில் தூதரக அதிகாரியாக பணியாற்றி பின்னர் அந்த நாட்டை விட்டு வெளியேறிய தே யாங் ஹோ ,…