Daily Archives: May 25, 2020

புதிதாக 45 பேருக்கு கொரோனா : செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்வு

செங்கல்பட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் கடைசி ஜமீன்தார்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தாபதி மறைவு

தமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31-வது பட்டம் பெற்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று மறைந்தார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், அந்த நேரத்தில் சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள். அப்போது அவருக்கு வெறும் மூன்றரை வயது தான். முருகதாஸ் தீர்த்தபதி தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் முடக்கப்பட்டு,…

துணை முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் சென்னை தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றும்; மாலையே வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

விண்வெளிக்கு போகலாமா? – ககன்யான் திட்டம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு முதன்முறையாக அனுப்பும் ககன்யான் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. 2022 ல் செயல்படுத்த உள்ள இந்த திட்டத்திற்கு இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியதால் விண்வெளி பயிற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ககன்யான்…