Daily Archives: June 3, 2020

காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, ‘கவுதம் மேனன் காக்க காக்க 2 படத்திற்காக சுவாரஸ்யமான கதையுடன்…

ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி நடித்துள்ள ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர். அந்தவகையில் ஜோதிகா…

முத்தமிழறிஞர் கலைஞருக்கு இன்று 97வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி(இன்று) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி-வட்ட-பேரூர்- கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் – திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். கொரோனா பரவலால்,…

இன்று 97வது பிறந்தநாள்- கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் மலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியதாதை செலுத்தினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் 97- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ஒரு ஜோடிக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணம் செய்து வைத்தார். கொரோனா பரவலால்…

புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கன் என்ற கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டிரிய ரைபிள், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள்,…

மகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது. இன்று தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும்…

கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை- நெஞ்சை உலுக்கும் சம்பவம்

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கடந்த வாரம் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து இருந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில் யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை…

1 2 3