Daily Archives: June 4, 2020

தமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1072 பேர் பாதிப்பு என தகவல்

தமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1072 பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கும் மின்வாரியம்- நடிகர் பிரசன்னா தாக்கு

நடிகர் பிரசன்னாவின் வீட்டுக்கு ரூ.70 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனவரி மாதம் செலுத்தப்பட்ட தொகையை விட தற்போது பல மடங்கு உயர்ந்திருப்பதாக கூறும் அவர், பொதுமுடக்கத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், மின்சார வாரியம் தவணை முறையில் கட்டுவதற்கு அல்லது கணக்கீடு எடுக்காத மாதத்திற்கு மாற்று வழியை பின்பற்ற வேண்டும் என்கிறார். தன்னால் அந்த தொகையை கட்டிவிட முடியும். ஆனால் சாதாரண மக்களால் கட்ட முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் டிவிட்டரில்…

பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி

‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சசி. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன் என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஹரீஷ் கல்யாணை வைத்து படம் இயக்கி வருகிறார் சசி. இந்நிலையில், சசி அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல்…

மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று…

எபோலோ வைரஸ் மீண்டும் பரவல் : தொடர் உயிரிழப்பால் காங்கோ மக்கள் அச்சம்

2018ம் ஆண்டு உலகையே கதிகலங்க வைத்த எபோலோ வைரஸ், காங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், ஏற்கனவே கொரோனா வைரஸால் 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பண்டகா நகரில் 4 பேர் எபோலோ வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எட்னி லாங்கோண்டோ, பாண்டகா நகரில் எபோலோ பரவல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்…

உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜுடன் கலந்துரையாடினார். தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை அப்போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக மீண்டும் கூறினார். ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:- இதுபோன்று உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க…

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் எனப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகளை முதலமைச்சர் காப்பீடு…