Daily Archives: June 5, 2020

இருள் நீக்கப் பிறந்த சூரியன்! PERIYAR LIFE HISTORY – 1

ஒரு பிராமணர், எது நடந்தாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்றே கூறுவார்.
ராமசாமி அவருக்கு ‘பாடம் புகட்ட’ வேண்டுமென நினைத்தான்.
ஒருநாள் அவர் ராமசாமியின் கடைக்கு வந்தார். அவரிடம்,
‘எல்லாம் அவன் செயல் என்பதை நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா’ என்று கேட்டான்.
அவரும் ‘ஆம்’ என்றார்.
உடனே ராமசாமி தனது கடையின் முன் இருந்த தட்டியை காலால் தட்டி விட்டான். அது அந்த பிராமணரின் மேல் விழுந்தது.
அவர் ராமசாமியைத் திட்டிக்கொண்டே அடிக்க வந்தார்.
‘உன் தலைவிதி உன் தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே ராமசாமி ஓட்டமெடுத்தான்.

கேரள யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் ரப்பர் தோட்ட பணியாளர் கைது…

கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ரப்பர் தோட்ட பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான கருவுற்ற பெண் யானை உணவுத் தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்ற போது, வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டுப் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள…

ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு

ஊரடங்கு முடிந்து ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்படும் சூழலில், அவை பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜூன் 8 முதல் மால்கள், ஹோட்டல்கள் இயங்க ஆரம்பித்தபின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.…

17,723 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா!

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா, இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பிரபலங்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவுகின்றனர். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக விஜய் தேவரகொண்டா, ‘விஜய் தேவரகொண்டா’ அறக்கட்டளையைத் திறந்தார். தற்போது இதன் மூலம் 17,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.…

கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் கண்டனத்திற்குரியது; மேலும் ஆறு மாதங்களுக்காவது சலுகை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரைத் துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது; முந்தைய மாத கட்டணங்களைப் “பேரிடர் நிவாரணமாக” அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு” மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் “பகல் கொள்ளை”யாக மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து…

ஐ.நா. நல்லெண்ண தூதராக சலூன் கடைக்காரர் மகள் தேர்வு!

ஐ.நா.வின் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நேத்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது. 13 வயதான நேத்ரா தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகளுக்காக கொடுத்துள்ளதை ‘மான் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்த நிலையில் நிலையில், ஐ,நா தற்போது நேத்ராவை…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக புதிதாக 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தமிழக மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் ஜுன் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சமாக இருக்கும் என சென்னையைச் சேர்ந்த ஐசிஎம்ஆரின் அங்கமான தேசிய…

1 2 3