Daily Archives: July 9, 2020

பிடிவாதம் பிடித்து சாதிக்கும் குழந்தைகள்

குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும். நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். தங்களிடம் பணப்புழக்கம் இருக்கும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே செலவு செய்வார்கள். பணக்கஷ்டத்தில் இருக்கும்போது குழந்தைகள் ஏதாவது கேட்டால் கடிந்து கொள்வார்கள். குழந்தைகள் எப்போதும் பெற்றோரிடம் ஒரேவிதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும். தாங்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் திடீரென்று கோபம் கொண்டு வாங்கித்தர…

ஆலிவ் ஆயில் நன்மைகள்

உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும். ஆலிவ் ஆயில் உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள். முடி உதிர்வதை தடுக்க ஆயில் மஸாஜ் தான் சிறந்தவழி. அதற்கு ஆலிவ் எண்ணெயயை லேசாக சூடுபடுத்தி தலையில் பூசி விரல் நுணியில் தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும்.…

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும்,…

சீனாக்காரனுக்கு இந்திய பகுதியை விட்டுக்கொடுத்தோமா?

மோடி என்ன பண்ணாலும் அதெல்லாம் ஆக்டிங்னு பிரிச்சு மேஞ்சுர்றீங்க சரி. ஆனா, அவரு ஏன் அதைப்பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டேங்குறாரு தெரியுமா? தொடர்ந்து தனது செட்டிங்ஸ் மற்றும் படப்பிடிப்புகளை நடத்திக்கிட்டே இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? வடக்கே இருக்கிற, இந்திப் பாடத்துலகூட பெயிலாகிற பான்பராக் வாயனுகதான் மோடியோட இலக்கு. அவனுகளுக்கு பேஸ்புக், ட்விட்டர்னு சமூக வலைத்தளங்கள் எதுவுமே தெரியாது. அவ்வளவு ஏன், தொலைக்காட்சியே கிடையாது. ஒரு பிரதமரா இருக்கிற மோடி டிஜிடல் இந்தியானு பேசிக்கிட்டே, இன்னமும் ரேடியோவுல மான்…

திருப்பூர், மலைகிராமங்களுக்கு 7 கி.மீ. நடக்கும் திமுக எம்.எல்.ஏ. – நெகிழும் மலைவாழ் மக்கள்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் திமுக எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், தனது தொகுதிகுட்பட்ட மலைவாழ் மக்களை சந்திக்க சுமார் 7 கி.மீ.தூரம் நடந்தே சென்று வருகிறார். இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது அந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுப்பதுடன், அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். தற்போது கூட கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி…

சன் பிக்சர்ஸுடன் நடிகர் விஜய் மோதலா?

இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கொரானோவிற்கு முன்-பின் என்றுதான் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். அதற்கு முன்னோடியாக மலையாள திரையுலகில் கொரானோவைரஸ்க்கு பின்புதிதாகதொடங்கப்படும் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது பெறும் சம்பளத்தை 50% குறைப்பது அது உறுதியான பின்பு அரசு அனுமதிக்கும்போது படப்பிடிப்பை தொடங்கலாம் என்று மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. தங்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்ததை…