Daily Archives: July 11, 2020

ரஜினியை பாராட்டிய இயக்குனர் சேரன்

மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்’ என்று குறிப்பிட்டு இயக்குநர் சேரன் நடிகர் ரஜினிகாந்த் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கொரோனா அச்சம் மற்றும் லாக் டவுன் காரணமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது. இந்த ஓய்வு நேரத்தில் திரைத்துறையினரில் பலரும் சமூக வலைதளங்களில் மும்முரமாக இயங்கி வருகின்றனர். இயக்குநர் சேரன் தற்போது ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து கருத்துப் பதிவிட்டு வருகிறார். மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வந்த அவர், தனது வாழ்க்கையின் மறக்க…

சாத்தான்குளம் வழக்கில் பென்னிக்ஸ் வீட்டில் மீண்டும் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் வழக்கில் பென்னிக்ஸ் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக பென்னிக்ஸ் வீடு மற்றும் அரசு மருத்துவமனையில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 69 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,898-ஆக அதிகரித்துள்ளது.

ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்

80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஆன்லைன் தியேட்டரா? அப்படின்னா என்ன? அதில் என்ன புதுமை? ஒன்பது குழி சம்பத் படத்தின் ஒரு வரி கதை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு…. *ஒன்பது குழி சம்பத் படத்தை ஆன்லைன் தியேட்டரில் வெளியிடுவதாகச் சொல்கிறீர்களே? அது என்ன ஆன்லைன் தியேட்டர்?* தியேட்டரில் படம்…

100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது – சக்திகாந்த தாஸ்

கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனா என்பது கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். போரில்லா காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்து வருகிறது. இது…

தமிழ்நாட்டில் ஜூலை 13 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்

பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருவது காலை பொழுதுகளை குளுமையாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் ஜூலை 13 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவில் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதே வேளையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம்…

அனைத்து மாவட்டங்களிலும் நாளை பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் நாளை அனைத்து மாவட்டங்களுக்கும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி இரண்டாவது ஞாயிற்றுகிழமையான நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நாளை கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருக்கும். பால், மருந்து கடை, மருத்துவமனைகள் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.