Daily Archives: August 1, 2020

இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் – மு.க. ஸ்டாலின்

இடஒதுக்கீடு வழக்கை போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம். சமூக நீதி காப்போம், சமத்துவ கல்வி வளர்ப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு அதன் மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்து கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு…

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு நீதிமன்றக் காவல்

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மீண்டும் எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. என்ஐஏ நீதிமன்றம் காவல் விதித்ததால் ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது.  சின்ன வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை…

அதிவேகத்தில் பறக்கும் சூப்பர் கார்

உலகில் அதிவேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்து பொறியியல் வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். 8 ஆண்டுகள் அவர்கள் செய்த முயற்சியில் பயனாக தற்போது இந்த அதிவேகக் கார் உருவாகியுள்ளது. இந்தக் காரின் குதிரை வேகத்திறன் 135000 ஆகும், மணிக்கு 1,288 கி.மீ வேகத்தில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1,609 கிமீ வேகத்தை 55 விநாடிகளில் எட்டிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் ஏறுமுகத்தில் தங்கம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.  இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை ஆனது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆனால், நேற்றியை விட இன்று இதன் விலை உயர்ந்து…

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை 27-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்து வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியதால், கடந்த 28-ம்தேதி முதல் மொத்த பாதிப்பு தகவல் வெளியிப்படவில்லை. குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றுபவர்களின் விவரங்ளை வெளியிட்டு வருகிறது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 36,511 பேர் உயிரிழந்த…

நாடு முழுவதும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த…