Daily Archives: August 4, 2020

தோவாளையில் அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு

குமரி: தோவாளையில் அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் சாலையோரம் கிரந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களிடம் புத்தகங்களை ஒப்படைக்க சென்றவர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு மயங்கி கிடந்தனர். பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கான புத்தகங்களை உள்ளுறை சேர்ந்தவர்களிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. புத்தக பைகளை மாணவர்களிடம் ஒப்படைக்காமல் சாலையோரம் போட்டுவிட்டு மது அருந்தியுள்ளனர். சாலையோரம் கிடந்த புதிய புத்தகங்கள், சீருடைகளை பொதுமக்கள் மீண்டும் பள்ளியில் ஒப்படைத்தனர்.

இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 108 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,349-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை…

தோனி உண்மையை உணர்த்தினார் –யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யுவ்ராஜ் சிங் தனது கிர்க்கெட் வாழ்க்கையில் கோலி மற்றும் தோனி ஆகியோர்களின் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார். இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. இந்நிலையில் ஓய்வுக்குப்…

நண்பர்கள் தினத்துக்காக சிம்பு பாடிய பாடல் – இணையத்தில் வெளியானது

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு என் நண்பனே எனத் தொடங்கும் பாடலை தயாரித்து பாடியுள்ளார். நடிகர் சிம்புவுக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய நண்பர் முகாம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது வீட்டிலேயே எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குபவர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல்நாள் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து அவர் அந்நாளைக் கொண்டாடும் விதமாக என் நண்பனே என்ற பாடலை தயாரித்து பாடி விரைவில் வெளியிட உள்ளார். தற்போது இணையத்தில் இந்த பாடலின் ப்ரோமோ…

மெமரி பவரை மேம்படுத்தும் டெக்னிக்

20 தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்களின் பெயர்களை எல்லாம் கடகடவென்று சொல்வார்கள். எப்போதோ படித்த இங்கிலீஷ் எஸ்ஸையை வரிமாறாமல் ஓப்பிப்பார்கள். எல்லாம் ஒரு காலம். இன்று சொந்த செல்போன் எண்ணையே சிலர் மறந்துவிடுகிறார்கள். பிறந்தநாள், திருமண நாள் கூட நினைவில் நிற்பதில்லை. காரணம் மூளையின் நினைவுத் திறனுக்கான வேலைகளை செல்போனிடம் கொடுத்துவிட்டோம். அடுத்து ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றால் கூகுள் செய்து பெற்றுவிடுகிறோம். பெரியவர்களின் நிலையே இதுவென்றால் …. மாணவர்கள்……? பாவம்….. பெரும்பாலான மாணவர்களை வதைப்பது…