Daily Archives: August 5, 2020

சூரியன் – சில குறிப்புகள்

சூரியன் பிறந்து 450 கோடி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் ஆயிரம் முதல் மூவாயிரம் கோடி ஆண்டுகளுக்கு அது வானில் எரிந்து கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். 300 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒளியின் உதவியோடு பூமியில் உயிர்கள் தோன்றின. 200 கோடி ஆண்டுகளுக்கு முன், மூலமுதலாக தோன்றிய நுண்ணுயிர்களில் ஒன்று சூரிய ஒளியின் ஆற்றலை உணவாக மாற்றிக் கொள்ள பழகியது. எல்லா தாவரங்களும் இந்த முறையை உபயோகிக்க துவங்கின. இதற்கு ‘போட்டோ சிந்தசைஸ்’ என்று…

மதசார்பற்ற இந்தியாவும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவும்

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோயிலை திறந்துவைக்க 1951 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசு சார்ந்தவர்கள் மதத்தை தனித்து வைப்பதில் மிகவும் உறுதியாக இருந்த சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்துக்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், “இந்த நிகழ்வுக்கு நீங்கள் தலைமை தாங்கவில்லை என்றால் அது நல்லது” என்று குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழ் கவனிக்கப்படாமல், பராமரிப்பு இன்றி இருந்த சோமநாதர் கோயில் முகலாய…

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா அயோத்திக்கு பிரதமர் வருகை

ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் நீண்ட நாள் கனவான ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (ஆகஸ்டு 5) தொடங்குகிற நிலையில் அயோத்தி விழாக் கோலம் பூண்டிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மோடி காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையத்திற்கு வந்து காலை 11.30 மணிக்கு அயோத்தியில் உள்ள சாகேத் கல்லூரி ஹெலிபேடில் வந்திறங்குகிறார். அவர் முதலில் ராமரின் சேவகரான அனுமர் கோயிலில் ஏழு நிமிடங்கள் வழிபடுகிறார். பின் தங்குமிடத்துக்கு சென்று ராம ஜென்மபூமி டிரஸ்டிகளுடன்…

தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ. 792 உயர்ந்து ரூ.42,208க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 42,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 42,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது தங்கம் விலை. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவால் சர்வதேச அரங்கில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக…

லெபானானில் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலி

லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலியாகினர்.லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும் கரும்புகைகளுமாக வெளியேறியது. இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் காலமானார்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் காலமானார். மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரான சிவாஜிராவ் பாடடடீல் புனேவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

குழைந்தைகளின் ஆற்றலை வளர்க்கும் இசை

இசையானது குழந்தைகளின் மொழி ஆற்றல், வாசிப்புத் திறனை வளர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே இசை என்பது உற்சாகத்தை தரக் கூடியது, கவலையை மறக்கடிக்கக் கூடியது. அதனால்தான் சிறியவர் முதல் பெரியவர் வரை இசையில் மயங்கிப் போய் கிடக்கிறார்கள். தொடர்ச்சியான முறையில் இசையைக் கற்று வருவதன் மூலம் வாசிப்பு ஆற்றல் உட்பட மொழி அறிவை மேம்படுத்தக்கூடிய வகையில் மூளையில் மாற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் உள்ள மனோதத்துவ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விlல் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில்,…