Daily Archives: August 20, 2020

சட்டமன்ற சண்டமாருதம் ரகுமான்கான்-திருச்சி சிவா

 மறைந்த ரகுமான்கான் மறைவு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வெளியிட்டுள்ள அஞ்சலி செய்திஇன்று காலையிலிருந்து கான் நினைவுகள் 1970 ன் பிற்பகுதி 80ன் முற்பகுதிகளில்  சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவசரநிலைக்காலம், அதைத் தொடர்ந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம். தலைவர் கலைஞரின் பரவசப்படுத்தும் ராஜதந்திர அரசியல் நடவடிக்கைகள், கழகத் தோழர்களின் முழு ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, கழக நிர்வாகிகளின் அரவணைப்பு நிறைந்த முழுநேரப் பணிகள், மாலை நேரங்களில் எங்காவது ஒரு பகுதியில் தினந்தோறும் பொதுக்கூட்டங்கள். மாணவர் அணி நிர்வாகியாக கூட்டங்கள்…

தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது – பிரதமர் மோடி புகழாரம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து, ஓய்வுபெற்ற தோனிக்கு தேசிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் எனப் பல தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் ஏற்பாடு செய்யப்படும் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தோனியை புகழ்ந்து கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 15ஆம் தேதி உங்களுக்கே உரியப் பாணியில் ஓய்வை அறிவித்தீர்கள். உங்களுடைய ஓய்வு 130 கோடி இந்திய மக்களிடையே…

பாஜக H.ராஜா வுக்கு அதிமுக அரசின் பணிவான பதில்

கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 22) நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை பொதுவெளியில் நடத்தத் தமிழக அரசு தடை விதித்தது. விநாயகர்‌ சிலைகளை பொது இடங்களில் நிறுவ வேண்டாம் என்றும், விநாயகர்‌ சிலை ஊர்வலம், நீர் நிலைகளில் சிலைகளைக் கரைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நாளொன்றுக்கு 6 ஆயிரம் என்ற அளவில் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் எப்படி அனுமதி…

நிறவெறிக்கு மருந்து இல்லை – அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கமலா

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் தெற்காசிய பெண்மணியான கமலா ஹாரிஸ் அமெரிக்காவிற்காக உயிர்த் தியாகம் செய்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை நினைவுகூர்ந்துள்ளார். நிறவெறிக்கு மருந்து கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியிலிருந்து, கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று பேசிய கமலா ஹாரிஸ், நிறவெறிக்கு மருந்து கிடையாது. நிறவெறியை ஒழிக்க நாம்தான் பாடுபட வேண்டும். ஜார்ஜ் பிளாய்ட், பிரியோன்னா டெய்லர்…

மத்திய அரசு பணிகளுக்கு ஒரே தகுதி தேர்வுக்கு வைகோ எதிர்ப்பு

வங்கி, ரயில்வே என மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தத் தேசிய ஆள்தேர்வு முகமை உருவாக்கப்படும். இதன் மூலம் அரசு வேலைக்கு ஒரே தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில், நேற்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர். நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை…

ரகுமான்கான் மரணம் – முக ஸ்டாலின் இரங்கல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் “இடி” “மின்னல்” “மழை”-யில், ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த – கழகத்தின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அண்ணன் திரு. ரகுமான்கான் அவர்கள் மறைவெய்திவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன். ஆறுதல் கூறவோ – இரங்கல் தெரிவிக்கவோ ஆற்றலின்றி என் இதயம் அழுகிறது; திறனிழந்து திண்டாடுகிறது; உள்ளம் பதறுகிறது. திராவிட மாணவர் முன்னேற்றக் கழகக் காலந்தொட்டு, கழகத்திற்காக அவர்…

மன்னிப்பு கோர முடியாது நீதிமன்ற நடவடிக்கை எதிர்கொள்வேன் – பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தான் மன்னிப்பு கோர முடியாது என்றும், எந்த தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்க தயார் என்றும் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை பொறுத்தவரையில் நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பிரசாந்த் பூஷண் கருத்துக்கள் தெரிவித்தார் என்பது புகார். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வழக்கின் விசாரணை கடந்த 14ம் தேதி நடைபெற்றது.அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என…