Daily Archives: August 26, 2020

சூர்யாவுக்கு எதிராக ஹரி அறிக்கை பின்ணனி என்ன?

மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, சூர்யாவின் 39 ஆவது படத்தின் இயக்குநர் ஹரி. அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர்வைக்கப்பட்டது. அந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு இசை இமான். முதன் முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும், 2020 தீபாவளி வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 6 ஆம் தேதி படப்பிடிப்பைத்…

படப்பிடிப்பை தொடங்கிய முன்ணனி நடிகர்

கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப். கோலார் தங்கச் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யஷ் நாயனாக நடித்திருந்தார். இதில் யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கன்னடத் திரையுலகிலேலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் சமயத்திலேயே படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான…

சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை

ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்குவருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒரு வரை ஒருவர் குற்றம் சாற்றிக் கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம்.…

தற்காப்பு நடவடிக்கையில் அதிமுக தலைமை

“தமிழக பாஜக தலைவராக முருகன் பொறுப்பேற்றதில் இருந்து பிற கட்சியினரை பாஜகவுக்கு இழுக்கும் வேலைகள் இதற்கு முந்தைய காலத்தைவிட இப்போது வேகமாக நடந்து வருகிறது. திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி, கு.க. செல்வம் போன்ற பெரும் புள்ளிகள் பாஜகவுக்கு தாவி திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதேபோல பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகளையும் பாஜகவுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார் முருகன் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பாஜகவின்…

பாதிக்கிணறு தாண்டிய விஜய் பட இயக்குனர் பட அறிவிப்பு எப்போது?

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். தமன் இசையமைக்கவிருக்கிறார். இவை எல்லாமே முடிவாகி முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில்…

ஆங்கிலம், உளவியல், பொருளாதாரம் படிக்க விரும்பும் மாணவர்கள்

கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆங்கிலம், பொருளியல், உளவியல் பாடங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 1,547 அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3.1 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கிடையே கரோனா தொற்றால் நடப்பு ஆண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இணையவழியில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல்…

நான் எச்சரிக்கை விடுத்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி

பல மாதங்களாக நான் எச்சரிக்கை விடுத்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று ஆர்பிஐ ஆண்டறிக்கையை வெளியிட்டார். அதில் கொரோனா காலக்கட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரா மீட்சிக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார பாதிப்பை துல்லியமாக அறுதியிடவும் முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவினால் நம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அதிர்ச்சியைச்…