Daily Archives: September 29, 2020

தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்கு வங்காளத்தில் கொரோனா நெறிமுறை வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகள் வரும் அக். 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இதனால் தமிழகத்திலும் திரையரங்குகளை விரைவில் திறக்கவேண்டும் என்றும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை என்றும் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ…

தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்..31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசித்தார். பின்னர் பொதுப்போக்குவரத்து சேவையை தொடங்குமாறு நிபுணர் குழு பரிந்துரைத்ததன் பேரில், பேருந்து மற்றும் ரயில் சேவைக்கு முதல்வர் அனுமதி அளித்தார். இருப்பினும் கொரோனா தாக்கம்…

சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் மூன்று முறை விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வியே தழுவியுள்ளது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு அடுத்த இரண்டு ஆட்டங்களில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என…

தமிழகத்தில் இன்று மேலும் 5,546 பேருக்கு கொரொனா உறுதி

தமிகத்தில் இன்று மேலும் 5546 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,92,943 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,501 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1277 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,717 ஆக அதிகரித்துள்ளது

பாலிமர் செய்தியின் சிண்டு முடிதலுக்கு திமுகவினர் பதிலடி!

பெரம்பலூரில் ஆ.ராசா தலைமையில் வேளாண் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது குடிபோதையில் கத்திய ஒருவரை தூக்கி வெளியே வீசும்படி ஆ.ராசா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதாவது… வேளாண் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு குடிகாரன் ஆ.ராசா வாழ்க என்று கத்துகிறான்… பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய அவனை “அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க” என்று ராசா கூறுகிறார்……

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளையுடன் 8-ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.