Daily Archives: December 1, 2020

ஜெர்மனியில் பயங்கரம்! பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 2 பேர் பலி பலர் படுகாயம்

ஜெர்மனியில் பாதசாரிகள் மீது திடீரென்று கார் மோதியதால், இதில் 2 பேர் பலியாகியிருப்பதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Trier நகரில் சற்று முன் பாதசாரிகள் மீது திடீரென்று கார் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்து காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்திருப்பதாக, Trier நகரின் மேயர் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது போலீசார் முதற்கட்ட விசாரணையில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதை உறுதிபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 4 இல் பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இலங்கை திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல்…

டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனாத் தொற்று

டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 86 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,74,380 ஆக அதிகரித்துள்ளது. 5,33,351 பேர் குணமடைந்துள்ளனர். 9260 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 31,769 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சினிமா படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்கும் லாபம் படக்குழு

விஜய்சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லாபம். ஸ்ருதிஹாசன் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். படத்துக்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி கலந்துகொண்டுள்ள இப்படப்பிடிப்புக்கு விஜய்சேதுபதியை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்துவிடுகிறார்கள். முறையாக கொரோனா முன்னெச்சரிக்கையை பின்பற்றவில்லை. நிறைய ரசிகர்கள் மாஸ்க் போடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் விஜய்சேதுபதியைச் சந்தித்துவிட்டு செல்கிறார்கள். விஜய்சேதுபதியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரசிகர்களை சந்தித்து பேசியும், கைகொடுத்தும் வருகிறார். இந்த…

ஆதரவு கேட்டு ரஜினி வீட்டுக்கு செல்ல தயாராகும் கமலஹாசன்

சட்டமன்றத் தேர்தலின் போது ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அண்மையில் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றார். இந்நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இதன் பிறகு செய்தியாளர்களை கமல் சந்தித்தபோது, ரஜினி நேற்று நடத்திய கூட்டம் பற்றியும் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது.…

சிவக்குமாருக்கு கொரேரனா இல்லை

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகப் பரவிய தகவலுக்கு சிவகுமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  சிவகுமார் , தமிழ் சினிமாவுக்கு காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என நடிப்பில் உச்சம் தொட்டவர் சிவகுமார். இதுவரை தமிழில் 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தினசரி உடற்பயிற்சி , யோகா என்று எப்போதுமே ஆரோக்கிய உடல்நிலையுடன் இருப்பவர் சிவகுமார். சினிமாவில் நடிப்பதிலிருந்து தற்பொழுது விலகியிருக்கிறார் சிவகுமார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரின்…

பாமக வன்முறை கட்சி இல்லை – அன்புமணி ராமதாஸ்

இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளித்தார் அன்புமணி ராமதாஸ். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள TNPSC அலுவலகம் முன்பு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே பெருங்களத்தூரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பாமக தொண்டர்கள், ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை…

1 2 3 5