Daily Archives: December 8, 2020

விலங்குகள் நிலப்பகுதிக்கு வந்தது ஏன்?

தொடக்கத்தில் உருவான விலங்குகள் நீரிலேயே வாழ்ந்தன. பின்னர், நிலத்தில் புதிய உணவு வகைகள் கிடைத்தவுடன், இவை நிலத்திலும் வாழத் தொடங்கின. நீரை விட்டு வெளியேறிய விலங்குகளுக்கு, சுவாசிப்பதற்காக செதில்களுக்குப் பதிலாக நுரையீரல்கள் உருவாகின. நீரில் நீந்துவதற்காக பயன்பட்ட துடுப்புகள், தரையில் நடக்கப் பயன்படும் கால்களாக மாறின. முதன்முதலாக நீரிலிருந்து நிலத்துக்கு மாறியவை இச்தியோஸ்டேகா போன்ற விலங்குகளாகும். இவை மீன்களைப் போல தலை மற்றும் வாலையும்,  வலுவான முதுகெலும்பு மற்றும் கால்களையும் பெற்றிருந்தன.

பறக்கத் தெரிந்த முதல் விலங்கு எது?

மற்ற விலங்குகளை விட பூச்சிகள்தான் வெகு காலத்திற்கு முன்பே பறக்கும் ஆற்றலைப் பெற்றன.   கடலுக்கு அடியில் வாழ்ந்த புழுக்களில் இருந்து இந்த பூச்சிகள் உருவாகி இருக்கலாம். சில பூச்சிகள் பிரமாண்டமானவையாக இருந்தன. 3 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் மிகப்பெரிய தட்டாம்பூச்சி வகையைச் சேர்ந்த மகநியூரா அத்தகைய பூச்சிகளில் ஒன்று. இதன் இறகு நீளம் 60 சென்டிமீட்டருக்கு மேல் இருந்ததாக கருதப்படுகிறது.

ஆலங்கட்டி மழை உருவாவது எப்படி?

வானின் உயரமான பகுதிகளில் வெப்ப காலங்களில் கூட கடும் குளிர் நிலவும். இதனால், மேகத்தின் உயர்ந்த பகுதியில் நீர்த்துளிகள், பெரிய பனிக்கட்டிகளாக உறைந்து விடுகின்றன. இவை, ஆலங்கட்டிகளாக மாறுகின்றன. ஆலங்கட்டிகள் வானிலிருந்து வேகமாக விழுகின்றன. இந்தக் கட்டிகள் பெரிதாக இருப்பதால் கரைவதற்கு போதிய அவகாசம் இல்லாமல் சிறு சிறு பனிக்கட்டிகளாகவும் சில நேரங்களில் பெரிய பனிக்கட்டிகளாகவும் பூமியில் விழுகின்றன. பெரிய ஆலங்கட்டிகள் உருவாவது எப்படி? பனிக்கட்டிகள் கனமாக மாறும்போது, அவை கீழே வருகின்றன. ஆனால், குமுலோ-நிம்பஸ் மேகத்திற்குள்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடையடைப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்தும், அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சை மாவட்டத்தில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சை நகரில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன. மேலும், வேளாண் சட்டங்களை கண்டித்து, காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் தலைமையில், தஞ்சாவூர் காந்திஅடிகள் சாலையில் ஏராளமான விவசாயிகள் மறியல் போராட்டத்தில்…

விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது. திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் சுமார் 2 ஆயிரம் கடைகளை மூடி விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்.

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (பாரத் பந்த்)

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும் இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று…

எட்டு வழி சாலைக்கு தடை தொடரும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சேலம் – சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைப்பது தொடர்பான விசாரணையில் தடையை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் – சென்னை இடையே எட்டு வழி சாலை அமைத்தல் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் பலர் எட்டுவழி சாலை திட்டத்தை நிறைவேற்ற கூடாது என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக நடைபெற்ற நிலையில் அவசர அவசரமாக நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஏன் என கேள்வியெழுப்பியதுடன் சுற்றுசூழல் அனுமதி பெறாமல்…

1 2 3 4