Daily Archives: December 25, 2020

அதிமுகவுக்கு ஆதரவாக எல்.முருகன்!

தமிழக அரசில் ஊழல் இல்லை என்பது தான் உண்மை என அதிமுகவிற்கு எல்.முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை பாஜக அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்க்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. அதுகுறித்து ஆளுநர் தான் முடிவு செய்ய முடியும். தமிழக அரசில் ஊழல் இல்லை என்பது தான் உண்மை என அதிமுகவிற்கு…

ரஜினி உடல்நிலை: போனில் விசாரித்த முக ஸ்டாலின்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன்னர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு மட்டுமே உள்ளது என்றும் அது தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் குறிப்பாக கோவிட்19 தாக்குதல் அவருக்கு இல்லை என்றும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து…

ஒரு ரூபாய்க்கு சத்தாண உணவு- பிரபல கிரிக்கெட் வீரரின் நெகிழ்ச்சியான செயல்

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி எம்.பியுமான கௌதம் கம்பீர் தனது சொத்த செலவில் ஏழை மக்களுக்கு உணவளிக்க ஒரு ரூபாய் கேண்டீனை திறந்துள்ளார். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்து, மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்நிலையில் அரசியல் பணிகளுக்கிடையே தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக சொந்த செலவில் கிழக்கு டெல்லியில் புதிய உணவகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அரிசி சோறு,…

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு 21 வயது இளம்பெண் தேர்வு

கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு 21 வயது இளம்பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கேரளாவில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலராக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர், திருவனந்தபுரம் நகரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கல்லூரி மாணவியான ஆர்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் உள்ளார். இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு…

பிரபல நடிகருக்கு வில்லனாகும் ஆர்யா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக…

நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா!-

ஆபிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நைஜீரியாவில் மரபணு மாற்றம் பெற்ற மற்றுமொரு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்கள் அனைவரையும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் குறித்து விரிவாக ஆராய வேண்டியிருப்பதாக ஆபிரிக்க நோய்த்தொற்று தடுப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா தவிர டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தனது மரபணுவை மாற்றிக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு…

டாஸ்மாக் கடையைத் திறக்க ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டம்!-

அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை திறக்க ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை திறக்க ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் ஆற்றுகரை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை நேற்று திறக்கப்பட இருந்தது. இந்தநிலையில் அருணாசலபுர பகுதி பொதுமக்கள் சுந்தர்ராசு தலைமையில் நாகுடி கடைவீதியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…

1 2 3