Daily Archives: March 5, 2021

அய்யா சமூக வலைத்தள போராளிகளே….

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணில் நீர் ததும்ப பேசினார் என்று நியூஸ் செவனில் ஊதுகிறார்கள்… ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்றும், கவுரவமான இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் மேலிட தலைவர் வீரப்ப மொய்லி கூறுகிறார்… மார்க்சிஸ்ட்டுகள் கமல்ஹாஸனின் மக்கள் நீதி மய்யத்துடன் பேசப்போகிறார்கள் என்று ஒரு செய்தியை பரப்புகிறார்கள்… உடனே சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அதை மறுக்கிறார்… மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று வைகோவிடம் வாயைப் புடுங்குகிறார்கள்… அதற்கு வாய்ப்பே…

திருமாவின் முடிவு… ஒரு திமுக காரனின் நெகிழ்வு!

உடைந்து போன அண்ணன் திருமாவை பார்த்தேன். எனக்கு அரசியல் விவரம் தெரிந்த நாள் முதல் நேற்று வரை 25 ஆண்டுகாலம் நான் இந்த உடைந்த முகத்தை பார்த்தது இல்லை… 1000 எதிரிகளை ஒரு சொல்லால் வீழ்த்தும் வல்லமை பெற்றவர் அண்ணன் திருமா. அவர் ஏன் இந்த சூழலுக்கு ஆளானார் என்று பார்த்தால், அதுவும் இந்த தேசத்தின் நலனுக்காகத்தான். அவர் திமுக_வை தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்க முடியும்.. அல்லது மக்கள் நல கூட்டணியை உருவாக்கியிருக்க முடியும் .…

பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடித்தே தீருவோம் – வீரப்பமொய்லி உறுதி

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்பதால் மதச்சார்பின்மைக்கு வழி சேர்க்கும்.பாஜக தலைமையிலான பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி கூறினார். திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்ட ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் மேற்பார்வையாளர் வீரப்ப மொய்லி, ‘காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் முடிவாகும்.திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும். தொகுதிப் பங்கீடு…