Daily Archives: March 17, 2021

ஊழலை ஒழித்தால் சரக்கு ரேட் குறையுமா?

(அன்னா ஹஸாரே ஊழலை ஒழிக்க போராடிய சமயத்தில் முகநூல் நண்பர் புளியங்குடி மணிகண்டன் என்பவர் எழுதிய பதிவு இது. அப்பவே ஊழல் எதிர்ப்பு போராளிகளின் முகத்திரையை கிழித்திருந்தார். இப்போதும் இது பொருத்தமாக இருப்பதால் வெளியிடுகிறோம்) ஊழல் என்பது என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமலேயே பலர் அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் சாரை சாரையாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழலை மருந்து அடித்து ஒழித்துவிட்டால் என்ன ஆகும் என்பதும் பலருக்குத் தெரியாது. நான் ஊழல்வாதியா, ஊழலுக்குத் துணை போகிறேனா என்று…

நிலவின் மறுபக்கம் (அக்டோபர் 26, 1959) – History of space exploration

பூமியிலிருந்து எப்போதுமே நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். மறுபக்கத்தை பார்க்க முடியாது. முதன்முறையாக சோவியத் விண்கலம் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து அனுப்பியது. 1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி லூனிக்-3 என்ற சோவியத் விண்கலம் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து அனுப்பியது. 4 லட்சத்து 83 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து அந்த படம் பூமிக்கு அனுப்பப்பட்டது. அக்டோபர் 4ஆம் தேதி பூமியிலிருந்து புறப்பட்ட விண்கலம் இதுவரை யாருமே பார்த்திராத நிலவின் மறுபக்கத்துக்குச் சென்று அற்புதமான…

மனிதகுல வரலாறு – எழுத்துமொழி வளர்ச்சியும், எகிப்து நாகரிகமும்

எழுத்துமொழி வளர்ச்சி பண்பாட்டு வளர்ச்சியின் காரணமாக மக்கள் தங்களது சமூகம் குறித்த தகவல்களை ஆவணங்களாக மாற்றத் துவங்கினர். மதகுருமார்கள் பிறர் கொடுத்த நன்கொடைகள் போன்ற வற்றை பதிவு செய்தனர். வணிகர்கள் தங்களது வியாபார பரிவர்த்தனையையும், தலைவர்கள் தங்கள் போர் வெற்றிகள் போன்றவற்றையும், தங்களது மக்கள் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களையும் எழுத்துப் பூர்வமாக வரையறுத்தனர். எழுத்து மொழி முதலில் கிளைப்ஸ் எனப்படும் சித்திர வடிவிலேயே இருந்தது. இவை பொருட்கள் மற்றும் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக இருந்தன. இவை பின்னாளில் எழுத்துக்களானது.…