Daily Archives: May 7, 2021

இது தமிழ்நாடு அரசு – இனி இங்கே தமிழுக்கே முதலிடம்!

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக ஆளுநரின் ஒப்புதலுடன் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்த வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனராக இருந்து வந்தார். தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1996-2001 காலகட்டத்தில்…

முதல்வரின் முத்தான செயலாளர் தேர்வு!

உமாநாத் IAS ரேபிட் கிட் விலையை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் போது அமைச்சர் விஜயபாஸ்கரை நீங்களே விலையை சொல்லுங்கள் என்று கோர்த்துவிட்டவர். அனு ஜார்ஜ் IAS ஆளுங்கட்சியின் அதிகார மிரட்டலுக்கு அடிபணியமல் அங்கன்வாடி ஊழியர் நியமனங்களில் தகுதி அடிப்படையில் ஊழியர் நியமனம் செய்தவர். அதனாலயே பழிவாங்கப்பட்டவர். சண்முகம் IAS எடப்பாடியும் உதயகுமாரும் கொள்ளையடிக்க முயன்ற பாரத் நெட் டெண்டரில் முறைகேடு என கையெழுத்து மறுத்து கோப்பை திருப்பி அனுப்பியவர். உதயசந்திரன் IAS • தமிழகத்திற்கே அவமானச்சின்னமாக இருந்த பாப்பாபட்டி…

கனிமொழி எம்.பி.யுடன் மதுரை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திப்பு!

தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க மதுரை வடக்கு மாவட்ட திமுக மகளிரணி செயலாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் சென்றிருந்தார். பதவியேற்பு நிகழ்வில் அவரை பார்த்த மாநில திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. அருகில் அழைத்து விசாரித்தார்.

மூர்த்தி பதவியேற்பில் மதுரை திமுகவினர் பங்கேற்பு!

மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அவருடைய பதவியேற்புக்கு மதுரையிலிருந்து திமுகவினர் சென்றிருந்தனர். அரசியலில் அவருடன் இணைந்தே பயணிக்கும் நண்பர்கள் பதவியேற்பில் பங்கேற்றதுடன், அவர் கோட்டையில் தனது துறை அலுவலகத்தில் பொறுப்பேற்று கோப்புகளில் கையெழுத்திடும் நிகழ்விலும் உடன் இருந்தனர். மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்கும் நிகழ்வில் அவருடைய அறையில், மதுரை வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணிச் செயலாளர் ரேணுகா ஈஸ்வரி, அவருடைய கணவர் கோவிந்தராஜ்…

காலிஃப்ளவர் ஃப்ரை

தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் – 1, உப்பு – தேவைக்கு, மஞ்சள் – 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், மைதா – 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளவர் மாவு – 1 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கேற்ப. செய்முறை ஒரு பாத்திரத்தில்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 40. ஜீரணசக்திக்கு ஏலக்காய்!

ஏலக்காய் பற்றி எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும், அந்த காபி, டீ. இந்த ஏலக்காய் பற்றி சற்று விரிவாக காண்போம், அஜீரணம்: சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 39. வயிற்றுப்போக்கு தீர மாவிலை!

மா இலையைச் சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காயங்கள் மீது தடவ விரைவில் ஆறும். மாந்தளிரை மென்று தின்று வர, பல் ஈறு உறுதிப்படும். மா இலையைத் தீயிலிட்டுப் புகையை சுவாசிக்கத் தொண்டை வலி மாறும். இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண, வயிற்றுப்போக்கு நிற்கும். உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வயிற்றுப் போக்கின் போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும். மாங்கொட்டை பருப்பைப் பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன, வயிற்றுவலி குணமாகும்.