Daily Archives: June 18, 2021

திமுகவுடன் இணைந்து பணியாற்ற ராகுல் உறுதி!

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக Jவியாழக்கிழமை டெல்லி சென்றார். மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் மாலை 7 மணிக்கு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர். இன்று காலை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்…

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறு தவறுகள் – Venkat Ramanujam

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்.. ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்.. அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்.. காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி…

பிரபாகரனின் ஆளுமை லட்சணம் இவ்வளவுதான்! – Athanurchozhan

இந்தியா ஏற்பாடு செய்த அமைதி உடன்படிக்கை ஏற்பதாக சொல்லி பிறகு அதை எதிர்த்து சண்டையிட்டீர்கள்… இந்திய அமைதிப்படையுடன் மோதினீர்கள்… ஏராளமான இந்திய வீரர்கள் செத்து மடிந்தார்கள்… அமைதி ஒப்பந்தத்திற்கு காரணமான ராஜிவை மனித வெடிகுண்டு வைத்து கொன்றீர்கள்… நார்வே குழு ஏற்பாடு செய்த அமைதி உடன்பாட்டையும் ஏற்பதாக முதலில் சொல்லி பிறகு நிராகரித்தீர்கள்… அதற்கு என்ன காரணம்? வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தவர்கள்தானே… நார்வே தூதுக்குழுவினர் பல கட்டங்களாக விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன்,…

18-6-2021 தினப்பலன்

மேஷம் உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்கலாம். வேலையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. ரிஷபம் சுமாரான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது கஷ்டமாக இருக்கும். இதனால் இன்றைய தினத்தில் எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் யோசித்து செயல்படுவது நல்லது. வேலை…

சோனியா காந்தி, ராகுலை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வரான பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள அவர் சோனியா, ராகுலை சந்திக்கிறார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், 25 கோரிக்கைகளை தமிழக நலன்கருதி முன்வைத்தார் ஸ்டாலின். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், மேகதாது அணைத் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் பணியை தொடங்க க வேண்டும் , நீட் உள்ளிட்ட அனைத்து…

தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!?

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா உடன் தனுஷ் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களுடன் கூட்டணி வைப்பதும், தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களுடன் கூட்டணி வைப்பதும் அதிகமாகி வருகிறது. ஏற்கனவே விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகத் தற்போது கூறப்படுகிறது. சேகர் கம்முலா மிகவும் பிரபலமான தெலுங்கு இயக்குனர். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள ஹேப்பி டேஸ்,…

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ‘தளபதி 65’ பர்ஸ்ட் லுக்!?

விஜய்யின் பிறந்தநாளில் ‘தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதையடுத்து மீண்டும் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்ததினம் என்பதால் அன்று தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள்…