Daily Archives: June 21, 2021

சிற்பக்கலையில் சாதியை புகுத்த முயற்சி!

கோவில் பணிகளில் சிற்பக்கலை முடித்த மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்தும், சிற்பக்கலை ஆச்சார்யார்களுக்கே சொந்தமானது என்றும் கல்லூரியில் படிப்பதால் மட்டும் சிற்ப நுணுக்கம் வந்துவிடாது என்றும் கூறி, ஆச்சார்யார்களுக்கே ஸ்தபதி பணிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஒருவகையில் கலையை ஒரு குலத்திற்கு மட்டுமே சொந்தமானதாக்கும் முயற்சி என்றம், சிற்பக்கலையை ஒரு சாதிக்கு மட்டும் உரிமை கொண்டாடும் போக்கு என்றும் சிற்பக்கலை பயின்றோர் குரல் எழுப்பியுள்ளனர்.…

பிராடு பாபாவை ஹைடெக் யோகி என்ற சுஜாதா!

‘வீடுமின் முற்றவும்’ என்று சொன்ன நம்மாழ்வாரைக் காட்டிலும் சுருக்கமாக, ’விடு, வீடு’ என்று உபதேசித்து, சுவிஸ் சாக்லேட் தந்து என்னை ஆசீர்வதித்த சிவசங்கர் பாபாவை ஒரு ஹைடெக் யோகி என்பேன். ஐ.எஸ்.டி.என். கனெக்ஷன் மூலம் உலகோடு பேசுகிறார்; உறுத்தாமல் உபதேசிக்கிறார். கேளம்பாக்கத்தை அடுத்த அவரது ‘சம்ரட்சணா’ வசதிகள் 35 ஏக்கரில் பரவியுள்ளன. ஆஸ்பத்திரி அஞ்சு நட்சத்திர ஓட்டல் போல் இருக்கிறது. கட்டணம் ஒரு நட்சத்திரம் கூட இல்லை; இலவசமாம். வயசானவர்களுக்கு நிம்மதி தர, ஆரோக்கியமான சூழ்நிலையில் வீடுகள்…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை திருப்பித்தர ரெடி – தோற்று கதறும் மோடி அரசு – Venkat Ramanujam

காஷ்மீரில் #பாஜக வின் ஒன்றிய அரசு தான்தோன்றித்தனமாக தானே மாநில உரிமையை மற்றும் #article370 ஐ ஆகஸ்ட் மாதம் 2019 வருடத்தில் நீக்குகிறது.. இருபத்தி இரண்டு மாதம் கழித்து இப்போது மாநில உரிமையை கொடுக்கிறேன் வாருங்கள் பேச்சுவார்த்தைக்கு என காஷ்மீர் மாநில தலைவர்களை கெஞ்சி அழைக்கிறது.. கடுப்பான காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எல்லோரும் வரமுடியாது யாராவது இரண்டு பேரை அனுப்பி வைக்கிறோம் என கெடு விதிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. கடந்த 22 மாதத்தில் காஷ்மீர்…

பிரபாகரனை போற்றும் பெரியாரியவாதிகளுக்கு ஒரு கேள்வி! – Usman Ghani

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு வேறொரு நாட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் இனத்தின் தேசியத்தலைவன் என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்துப் போற்றும் பெரியாரியம் பேசும் இயக்கங்கள், அமைப்புக்கள், பெரியாரியவாதிகள், மற்றும் அவர் தம் அடுத்த வார்சான இளையதலைமுறை பெரியாரியவாதிகளுக்கு எதிரொலியின் கேள்வி ஒன்று உண்டு. தமிழ்நாட்டில் இருக்கும் நீங்களெல்லாம் ஒருபக்கம் பெரியாரையும் ஆதரித்துக்கொண்டு, மறுபக்கம் மூச்சுக்கு முந்நூறுமுறை பெரியாருக்கு இணையாக பிரபாகரனையும் தூக்கிப்பிடிக்கிறீர்களே, அதற்கு சமமாக பிரபாகரனை பின்பற்றும் ஈழத்தமிழர்களோ, ஈழத்தமிழ் அமைப்புக்களோ, அவர்களின் புலம் பெயர் ஈழத்தமிழ்…

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

விஜய் பிறந்தநாளில் அவர் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை(ஜூன் 21) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளனர். அதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையில் விஜய் தெலுங்கு இயக்குனர்…

100 நபர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி

100 நபர்களுடன் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தமிழ்நாட்டில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் 100 நபர்களுடன் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பு நடத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன் படக்குழுவினர் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.…

கொரோனா நிதி திரட்டிய இயக்குனர் சுசீந்திரன்

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தி நிதி திரட்டியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் இருந்து வரும் நிலையில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு பலரும் நிதியளித்து வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் வெண்ணிலா கபடி குழு, ஈஸ்வரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் ஆன்லைன் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு குறித்த…