Daily Archives: August 7, 2021

திரையில் மிரட்டிய திகில் படங்கள் – 1 – சீமராஜா

கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சில சகோதரர்களின் பயோஸ்கோப் என்று சொல்லப்பட்ட சினிமா என்ற கலைச் சாதனம். அந்த ஆலமரத்தின் ஆயிரக்கணக்கான விழுதுகள் இன்று வெவ்வேறு பாணிகளில், கதையோட்டங்களில் டெக்னிக் பலத்தில் மொத்த மக்களையும் சொக்குப்பொடி போட்டது போல் மயங்க வைத்திருக்கிறது. இந்த மயக்கத்தில் தமிழ் சினிமாவின் காலச் சக்கரத்தைப் பின்னோக்கி ஒரு சாம்பிளாக “திரையில் மிரட்டிய திகில் படங்கள்” என்ற தலைப்பில் முன் வைத்திருக்கிறோம். 1931ம் ஆண்டு ‘காளிதாஸ்’ படத்தின் மூலம் பேசத் தொடங்கிய…

காஞ்சிபுரம் இட்லி

தேவையான பொருட்கள் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து – தலா 1 தம்ளர், கடுகு, சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், சுக்குப்பொடி- 1½ டீஸ்பூன், முந்திரி – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயப்பொடி – ½ டீஸ்பூன், நெய் – தாளிக்க, தயிர் – 2 கரண்டி, வெந்தயம் – ½ டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. தாளிக்க: வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரியை பொன்னிறமாக வறுத்து, மாவில் சேர்க்கவும்.…

பப்பாளிக்காய் சாதம்

என்னென்ன தேவை? உதிராக வடித்த சாதம் – 1 கப், தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் – 1/2 கப், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க கொத்தமல்லித்தழை – தேவைக்கு. அரைக்க… பச்சைமிளகாய் – 2, தேங்காய்த்துருவல் – 1/4 கப், சீரகம் – 1 டீஸ்பூன். தாளிக்க… கடுகு – 1/2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 5 இலைகள். எப்படிச் செய்வது? பச்சைமிளகாய், தேங்காய்த்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 50. இஞ்சி சாறு…

1. குழந்தைக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால்… ஒரு டீஸ்பூன் கிரைப்வாட்டரில் இஞ்சி சாறு ஐந்து துளி, இந்தக் கலவையோடு சம அளவு தேன் கலந்து கொடுத்தால் கோளாறு சரியாகும். 2. குழந்தைக்கு சளி தொந்தரவு ஏற்பட்டால்… ஆடாதொடா இலை மூன்று எடுத்து அதை ஆவியில் வேகவைத்து, பின்பு சுத்தமான வெள்ளைத்துணியில் அதைக் கட்டி சாறு பிழியவும். இந்த சாறில் ஐந்து துளியை ஐந்து துளி தேனில் கலந்து கொடுத்தால் பிரச்னை தீரும். 3. குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 49. தேள், தேனீ – விஷப்பூச்சிகளின் கடி

நாட்டோடு போட்டிருக்கும் வீடுகளில் தேள் இருப்பது சகஜம். கொஞ்சம் வலி முதல் உயிருக்கு அபாயம் வரையில் தேள் கொட்டினால் உண்டாகலாம். நண்டுவாய்க்காலி என்னும் பெரிய கரிய தேள் வகை மிகவும் விஷம் உள்ளது. இதன் கடியால் சில சமயத்தில் மரணமும் நேரிடக்கூடும். தேள் கொட்டுவது சாதாரணமாகக் கை கால் விரல்களில் நேரிடும். 1. கொட்டினவுடன், ஒரு கயிறு, கந்தல் துணி எது கிடைக்குமோ அதைக் கொண்டு கொட்டின இடத்துக்குச் சற்றுமேல் இறுகக் கட்டி ரத்த ஓட்டம் இல்லாமல்…

5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனவும் திருப்பூர், தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.1 முதல் பள்ளிகளை திறக்க திட்டம் -தமிழக அரசு

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.