Daily Archives: September 6, 2021

சுவையான சோள அடை

தேவையானவை: சோளம் – அரை டம்ளர்கடலைப்பருப்பு – கால் டம்ளர்துவரம்பருப்பு – கால் டம்ளர்உளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டிபெருங்காயம் – சிறு துண்டுமிளகாய் வற்றல் – 5பெரிய வெங்காயம் (பல்லாரி) – ஒன்றுசீரகம் – அரை தேக்கரண்டிகறிவேப்பிலைஉப்புநல்லெண்ணெய் செய்முறை:சோளம் மற்றும் பருப்பு வகைகளை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.…

கோபாலய்யங்காரின் மனைவி – புதுமைப்பித்தன் சிறுகதைகள் – 3

(பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின்…

சி.டி. ஸ்கேன் செய்யப்பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி

எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இறந்தவர்களை மனித உருவில் பெட்டிகள் செய்து அதில் அவர்களின் உடல் மற்றும் ஆபரணங்களை சிலவற்றை வைத்து அடக்கம் செய்வது வழக்கம். மம்மிகள் ஆராய்ச்சியும் ஆச்சரியங்களும் தீராத வண்ணம் இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது. 3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மி சுமார் 3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய பாதிரியாரின் மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டு ரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலிய மருத்துவமனை எகிப்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை சந்தித்தது.…

தீப்பிடித்த குடிசைகள் – கல்கி சிறுகதைகள் 2

1929-ம் வருஷத்தில் சட்டசபைத் தேர்தல்கள் இல்லை என்று இர்வின் மகாப் பிரபு தீர்மானித்து விட்டதில் என்னைப்போல் வருத்தமடைந்தவர்கல் யாரும் இருக்கமுடியாதென்று நினைக்கிறேன். என் துக்கத்தின் காரணங்களைச் சொல்கிறேன், கேளுங்கள். (1) இந்த வருஷத்தில் தேர்தல் நடந்து நான் இந்திய சட்டசபைப் பதவிக்கு நின்றிருக்கும் பட்சத்தில், என் எதிரி யாராயிருப்பினும் அவர் தேர்தலுக்கு முதல் நாள் யமலோகத்துக்கு வோட்டு கேட்கப் போய்விடுவாரென்றும், நான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவேனென்றும், ஜோசியர் சொல்லியிருந்தார். அது இல்லாமற்போயிற்று. (2) தேர்தல் விநோதங்களைப் பற்றிச் சிற்சில…

சீஸ்ஸீ வெஜ் சான்விச்

காய்கறி கலவை செய்ய பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது பச்சை குடைமிளகாய் – 1 நறுக்கியது சிவப்பு குடைமிளகாய் – 1 நறுக்கியது உப்பு – 1/4 தேக்கரண்டி சாட் மசாலா – 1 தேக்கரண்டி புதினா சட்னி – 2 தேக்கரண்டி மயோனைஸ் – 1 கப் சில்லி ஃப்ளேக்ஸ் – 1 தேக்கரண்டி சான்விச் செய்ய பிரெட் – 3 துண்டுகள் காய்கறி கலவை…

மழைத் தெய்வம் – ந. பிச்சமூர்த்தி சிறுகதைகள் 2

மறுபடியும் இன்றைய தினம் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஆமாம், கொடும்பாவி என்று என்ன பெயர்? இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம்! மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே! எனவே “மானம்…

வாய்த் திறக்க மாட்டேன் – மு. வரதராசன் சிறுகதைகள் 2

“நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன். “இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். “என்னை மறந்து விட்டாற் போல் தெரிகிறது, நான் தெரியவில்லையா, சாமி?” என்று அவன் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவன் என்னை அறிந்திருக்கலாம் பட்டணத்தில் பார்த்திருக்கலாம் என்று எண்ணினேன். “நீ யார் தெரியவில்லை, அப்பா” என்றேன். “என்ன…