Daily Archives: February 22, 2022

20 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அகரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது!

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, 20 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு சுயேச்சையும், 5 அதிமுகவினரும் வெற்றிபெற்றுள்ளனர். பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

ஓபிஎஸ்சின் சொந்த வார்டும் போச்சு… சொந்த தொகுதியும் போச்சு… சொந்த மாவட்டமே போச்சு…

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரை கைப்பற்றியதை பெருசா செய்தியாக்குகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமோ, சொந்தத் தொகுதியோ இல்லை, சொந்த வார்டில் அவருக்கு ரொம்ப வேண்டபட்ட மஞ்சுளா முருகனைக்கூட காப்பாற்ற முடியவில்லை என்ற செய்தி ஏன் பரவவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை திமுகவுக்கு தண்ணிகாட்டிய மேற்கு மண்டலத்தின் வெற்றியை மட்டுமே போகஸ் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. கடந்த பேரவை தேர்தலில்கூட போடி தொகுதியில் தங்கத் தமிழ்செல்வனிடம் தட்டுத்தடுமாறித்தான் பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் சொந்த…