Daily Archives: April 11, 2022

தந்தை பெரியார் அறிவுச்சுவடி – எழுத்தாளர் விந்தன் தயாரித்தது

எழுத்தாளர் விந்தன் தயாரித்த தந்தை பெரியார் அறிவுச்சுவடி பிடிஎப் வடிவில்… சுவாரசியமானது… சுருக்கமானது… குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அறிவூட்டுவது… periyararivuchchuvadi

குத்திக் குத்தி விளையாடுவோமா? – மருத்துவர் ரைஸ் Raize

‘நாம செத்து செத்து விளையாடலாமா?னு ஒரு படத்தில் வடிவேலு கிட்ட காமெடியன் முத்துக்காளை கேட்பார். அனேகமா அது ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ன்ற படமா இருக்கும். அது மாதிரி ‘குத்தி குத்தி விளையாடலாமா?’ எனும் ஒரு மாபெரும் தத்துவம் பற்றிய பதிவு இது! வருசத்துல எப்பவாச்சும் ஒரு நாள் எவனெவனெல்லாமோ போறான்னேன்னு நாமலும் ஜிம்முக்கு போயிட்டு வந்தா உடம்பு வலியெல்லாம் மறந்து ஜிவ்வுன்னு ஒரு ஃபீல் வருமே? அது எதனால தெரியுமா? என்டோர்பின்ஸ் மற்றும் என்ஸெபாலின்ஸ் (Endorphins…

எது கவுரவம்? – ஆணவக் கொலைகளின் ஆணிவேர்! – ஆதனூர் சோழன்

ஜாதி என்றைக்கு தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்கள் மாராப்பு சேலை அணிய முடியாத காலம் இருந்திருக்கிறது. அப்படி மார்புகளை மறைத்தால் வரிசெலுத்த வேண்டிய கொடுமை இருந்திருக்கிறது. இதை எதிர்த்து நாஞ்சலி என்ற பெண் தனது மார்பையே அறுத்து எறிந்து போராடியிருக்கிறார். உயர்சாதியினர் வசிக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்றும், உயர்சாதியினர் வரும்போது அவர்கள் கண்ணில் படக்கூடாது என்றும் சில சாதிப் பிரிவினரை ஒதுக்கி…

காவிரி பிரச்சனை – ஓர் உண்மை வரலாறு – 2 – ஆதனூர் சோழன்

1977 எம்ஜியார் ஆட்சி முதல் 2018 இறுதித் தீர்ப்பு வரை… 1977 மார்ச் மாதம் நெருக்கடி நிலை வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆறுமாதங்கள் கழித்து நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜியார் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது கர்நாடகாவிடம் பேசி தண்ணீரைப் பெறும் போக்கு நீடித்தது. காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும்போது திமுகமீது பழிபோடும் வழக்கத்தை அவர்தான்…

கிள்ளை பேரூராட்சியில் முகத்துவாரப் பணி

ரூ38 கோடியில் கிள்ளை பேரூராட்சி முடசல் ஓடை முகத்துவாரப்பணி நடைபெறுவதை, கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் கிள்ளை பேரூராட்சியின் குடிநீர் தேவைகள், முடசல்ஓடை, பில்லு மேடு, பொன்னந்திட்டு 40 வீடு, பட்டா தேவைகள், முழுக்குத் துறைமயான பிரச்சனை, கிள்ளை கடைவீதியில் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி வீடு தேவைகள், MGR நகர், தளபதி நகர், சிசில் நகர், இருளர் மக்கள் தொழிலுக்கு செல்லும் சாலை வசதி, தனி ரேஷன் கடை உள்ளிட்ட தேவைகளை…

இந்தியாவின் எதிர்பார்ப்பு மையம் ஸ்டாலின் – உதயமுகம் கவர் ஸ்டோரி

யாருமே எதிர்பாராத இடத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத் திருக்கிறது. இதுவரை யாருக்குமே கிடைக்காதது அந்த கவுரவம். ஏன், கலைஞருக்கே கிடைக்காதது அந்தக் கவுரவம். ஆம், இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்டிய சோவியத் அதிபர் ஸ்டாலினைப் போல, இந்தியாவை அச்சுறுத்தும் ஆர்எஸ்எஸ் பாசிசத்துக்கு முடிவுகட்ட மு.க.ஸ்டாலினை முன்மொழிந்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அகில இந்தியக் கட்சிகளை ஒருங்கிணைத்து, 2024 மக்களவை தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்த ஸ்டாலினை தேர்வு செய்திருக்கிறது…

போலீஸ் அரசியலில் புகுந்த புரட்சிக்காரன் “டாணாக்காரன்” – சேவற்கொடி செந்தில்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ஜெய் பீம் பட சர்ச்சை புகழ் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் டாணாக்காரன். இந்த திரைப்படம் ஓடிடி வலைத்தளமான டிஸ்னிஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஏன் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதை கடைசியாக பார்க்கலாம்.போலீஸ் கொடுமை பண்றாங்கன்னு சொல்லுவீங்க ஆனா இங்க போலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே என்ன என்ன பண்றாங்க பாருங்கனு ஒரு போலீஸ்காரரா இருந்து சினிமாவுக்குள்ள வந்துருக்குற இயக்குனர் தமிழ் படமாக்கி…