Daily Archives: June 2, 2022

பெயரையும் உருவத்தையும் வெளிக்காட்டாத பத்திரிகையாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

தினத்தந்தி நாளிதழில், அந்த நாளிதழில் வௌிவந்த வரலாற்று செய்திகளை தொகுத்து வெளியிட்டவர் ஐ.சண்முகநாதன். இவர் 1953 ஆம் ஆண்டு தினத்தந்தியில் பணியில் சேர்ந்தார். அப்போதிருந்து அந்த நாளிதழில் தொடர்ந்து பணிபுரிகிறார். அவர் தொகுத்த வரலாற்று செய்திகள், வரலாற்றுச் சுவடுகள் என்ற பெயரில் 2010 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்து மிகப்பெரிய அளவில் விற்பனையானது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தினத்தந்தியில் 70 ஆண்டுகளாக பணியாற்றினாலும், மிகப்பெரிய பணியை செய்து முடித்திருந்தாலும், அவருடைய…

எமை கருவறைக்குள் கூட்டிச் சென்ற உன் கையெழுத்து! – இரா.இராஜாராம்

நீ காவிரி கரையில் உதித்த இளஞ்சூரியன், ஈரோட்டு பெருநெருப்பின் அறிவுச் சூரியன், காஞ்சித் தலைவனின் ஞானசூரியன். நீ உன் தனித் தமிழால் தமிழுக்கு அணி செய்தாய், தரணி வாழ் தமிழர்கள் வாழ புதியதோர் விதி செய்தாய். செழுமையான நம் மொழிக்கு செம்மொழி நிலை தந்தாய். பழமையான விழுமியம் காக்க சிரமேற் கொண்டாய். முப்பால் தந்தவனுக்கு கடல் மும்முனையில் சிலை செய்தாய், எப்பால் என்றே குழம்பியோர்க்கு மூன்றாம் பாலென்று பெயர் தந்தாய். கடற்கோள் கொண்ட பூம்புகாரைப் புதுப்பித்தாய், வடக்கே…