கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் 2 – ராதா மனோகர்
தொடங்கியது நிழல் நாடகம்! வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்படவேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு எட்டாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள். ஏறக்குறைய ஐநூறில் இருந்து ஆயிரம் வரையிலான ஆண் பெண் பணியாளர்கள்…