Daily Archives: June 18, 2022

போராடினால் புல்டோஸர் வரும்… பொத்திக்கிட்டு வீட்டுல இரு..! – உதயமுகம் இதழ் தலையங்கம்

முகமது நபி குறித்து விஷமத்தனமான கருத்தை கூறி இஸ்லாமிய மக்களை ஆத்திரமூட்டிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி ஜூன் 10ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த நுபர் சர்மாவை கைது செய்வதற்கு பதிலாக, போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களின் போலீஸ் உதவியுடன் போராடிய மக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக்…

இது புல்டோசர் போகும் பாதை – இரா.இராஜாராம்

புல்டோசர்கள் போகும் பாதையில் வீடுகளைக் கட்டியது யார்? அந்த வீட்டின் சமையலறையில் மாட்டுக்கறி கொதிப்பதுவும் ஏன் ? அந்த வீட்டு அலமாரிகளில் பர்தாக்களுக்கும் புர்க்காக்களுக்கும் என்ன வேலை? பறக்கும் காகம் கருப்புதான் என்று அந்த வீட்டில் இருந்து ஏன் குரல் கேட்கிறது ? மாட்டுக்கறி கொதிப்பதும் மாட்டிக்கொள்ள புர்காவும் எதிர்க்கும் எதிர்க்குரலும் அந்த வீடுகளிலிருந்து வருமெனில்….. உங்கள் வீடுகளைச் சற்றே நகர்த்திக் கொள்ளுங்கள். “இது புல்டோசர் போகும் பாதை!” -இரா.இராஜாராம்.

ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? 2 – சம்சுல் இஸ்லாம் – (தமிழில் ச.வீரமணி)

2.தேசியக் கொடிக்கு விசுவாசமாக இருக்கிறதா ஆர்எஸ்எஸ்? ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் அமைக் கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது. மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது எதிர்த்தே வந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் “பூரண ஸ்வராஜ்யம்” அல்லது பூரண சுதந்திரம் என்னும் லட்சியம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஜனவரி 26 அன்று அந்த…