கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் 5 – ராதா மனோகர்
5. நிமித்தகாரியின் வேட்டைக்களம் குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள்… “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர் களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங் களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை நன்றாக உபசரித்து…