சும்மா கிடைத்ததா சுதந்திரம்..? – 7 – Fazil Freeman Ali
1640-ல் போர்ச்சுக்கீசிய கொழும்பில் கால்வைத்து மெல்ல ஒட்டுமொத்த சிலோனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த VOC, அடுத்ததாக கால்வைத்ததும் போர்ச்சுக்கீசிய காலனியாக மாறியிருந்த மலபாரில்தான். ஆம், டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியரை மலபாரிலிருந்து விரட்டியடித்தது குளச்சல் போர் நடப்பதற்கும் பல ஆண்டுகள் முன்பே நடந்த நிகழ்வு. சிலோனை பொறுத்தவரை கண்டி நாட்டு மன்னரோடு கூட்டுசேர்ந்துதான் போர்ச்சுக்கீசியரை இவர்கள் விரட்டியடித்தனர். மொழியாலும், இனத்தாலும், சாதியாலும் மதத்தாலும் பிரிந்திருக்கும் மக்களில் ஒரு கூட்டத்தோடு கூட்டு சேர்ந்து மற்றொரு கூட்டத்தை வீழ்த்துவது, அதன்பின் தமக்கு உதவிய…