Daily Archives: August 26, 2022

அமேசன் என்கிற ஆச்சரியம்

வருடமெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு! அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!! இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்! ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். இந்த காடுகள் ஆபத்தானவை. இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது! இதற்கு…

‘நான் பில்கிஸ் பானு பேசுகிறேன்’ – தோழர் க.கனகராஜ்

எனதருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம். அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும்,…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 10 – Fazil Freeman Ali

இப்ப‌டி வாழ்க்கை அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த‌ சூழ‌லில், இங்கு வ‌ந்து குடியேறியிருந்த‌ இன‌த்திலொன்று “இறை” என்ற‌ க‌ற்ப‌னாவாத‌ க‌ருத்திய‌லை கண்டுபிடித்த‌து. அதுவ‌ரை பிர‌ப‌ஞ்ச‌ ஆற்ற‌லான‌ இய‌ற்கையுட‌ன் ஒன்றி வாழ்ந்திருந்த‌ ம‌க்க‌ளிட‌ம், “அந்த‌ இய‌ற்கையையும் ப‌டைத்த‌துதான் இறை” என்று பிர‌ச்சார‌ம் முடுக்கிவிட‌ப்ப‌ட்ட‌து. “ந‌ம் புல‌ன்க‌ளுக்கு புல‌ப்ப‌டாத‌ ஒன்று இருக்கிற‌து, அத‌ன் பெய‌ர்தான் இறை. எல்லாம் அந்த‌ இறைவ‌னின் நாட்ட‌ப்ப‌டியே ந‌ட‌க்கிற‌து. இறைவ‌னே ந‌ம்மை உருவாக்கி, உண‌வ‌ளித்து, வாழ‌வைத்து, ம‌ர‌ணிக்க‌வும் செய்ப‌வ‌ன்” என்று துவ‌ங்கி நிறைய‌ புதுப்புது க‌தைக‌ளை உருவாக்கிய‌து அந்த‌…

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு… – ஜே.மஞ்சுளாதேவி

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, ஜெ.மஞ்சுளாதேவி எழுதிக்கொள்வது… சாகித்ய அகாதமி, யுவபுரஸ்கார் விருது பற்றி நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்… நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான் இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர விருது பெற்றவர்கள் மட்டும்தான் திறமையாளர்கள் என்று நீங்கள் நம்பலாம், தவறில்லை, ஆனால் அதை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை கொடுத்தார்கள். விருதுபெற்ற ப.காளிமுத்துவை உங்களுக்கு எத்தனை நாளாகத் தெரியும், விருது அறிவிப்பிற்குப் பிறகுதானே. எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள்? இனிமேல்தான் அவர் எழுதனும் இனிமேல்தான் வாசிக்கனும் என்று. அவர் வாசிப்பது…