Daily Archives: September 2, 2022

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 9 – ராதா மனோகர்

9. புத்தூர் நம்பியின் வரவு பாக்கியத்தம்மாளும் அவளது ஆலோசகர்களும் என்ன தான் நுணுக்கமாக திட்டங்கள் தீட்டி பாலவோரை தேசத்தை காக்க திடசங்கற்பம் பூண்டு இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்லவே? தேசத்தை காப்பாற்ற தம்பியை பணயம் வைக்கவேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் அவளை கொஞ்சம் கூட தூங்க அனுமதிக்கவில்லை. தாயும் தந்தையும் இறந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவளின் மனதளவில் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். சஞ்சலம் வரும்போதெல்லாம் மனதில் அவர்களிடமே கேள்விகளை கேட்டு பதில்களையும் பெறுவதாக அவள்…

இறந்தவன் பேசுகிறேன் -3- ஆனந்தி மகேந்திரன்

3. யார் இந்த ஆர்தர் ஃபோர்ட்? ஆர்தர் ஃபோர்ட் அமெரிக்காவின் மிகப்பிரபலம் வாய்ந்த ஆவியூடகவியலாளர். கடுமையான இருதய நோயால் அவர் இறந்தார். படித்தவர். பண்புள்ளவர். நகைச்சுவையாகப் பேசுபவர். அவரின் குறும்புத்தனமான, நையாண்டித்தனமான பேச்சுகளினால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர் சுய நினைவுடன் இருக்கையிலும் அவருக்குள் ‘ஆவி’ வந்து பேசுகையிலும் அனைவரையும் அவர் கவரக்கூடியவர். அவரது 50 ஆண்டுகால ஆவியூடகவியலில் அவர் சக்தி வாய்ந்த வலிமையான ஆத்மாக்கள், சக்தி குறைந்த சாதாரண ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும்…

வாழ்வியல் சிந்தனைகள் – 16 – ராதா மனோகர்

“ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி “….. அரசியல், வர்த்தகம், கலை, சமுகம், சமயம்….கேள்வி கேள்…சவால் விடு… உண்மையை தேடல் என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆத்மீக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது. உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆத்மீக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது. சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள், இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள். இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும்.…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 13 – Fazil Freeman Ali

ஒருவ‌ருக்கு ம‌த‌ ந‌ம்பிக்கை இருக்கிற‌தோ இல்லையோ, ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌வை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும், தீய‌வ‌ர்க‌ள் தீய‌வை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கிறார்க‌ள், இல்லையா..? ஆனால் அடிப்ப‌டையில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளைக்கூட‌ தீய‌ செய‌ல்க‌ள் செய்ய‌வைக்க‌ ம‌த‌-சாதிய‌ வெறி எனும் போதையை ஊட்டுவ‌து போதுமான‌தாக‌ இருக்கிற‌து. ம‌து போதையில் இருப்ப‌வ‌ர்க‌ளைப் போன்றே இவ‌ர்க‌ளும் என்ன‌ செய்கிறோம்..? ஏன் செய்கிறோம்..? எத‌ற்கு செய்கிறோம்..? என்று புரியாம‌லேயே ப‌டுபாத‌க‌ செய‌ல்க‌ளை ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ செய்துவிடுகிறார்க‌ள். ப‌ல‌ ம‌ன்ன‌ர்க‌ளும் நில‌ உடைமையாள‌ர்க‌ளாக‌ இருந்த‌ ப‌ல‌ இடைநிலை சாதியின‌ரும் இந்த‌ சாதிவெறி த‌லைக்கேறி…

உச்சநீதிமன்றத்தையே நாங்க நம்ப மாட்டோம்… RTIயையா நம்புவோம்! – கிறுக்குப்பயல்

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்தப் பணத்தில்தான் தனது உணவுக்கு செலவழிக்கிறார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு அரசுத் தரப்பு பதில் தெரிவித்துள்ளது. யார்கிட்டடா காது குத்துறீங்க என்று அப்பாவி பொதுஜனம் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறான். உச்சநீதிமன்றத்தை தங்கள் விருப்பப்படி தீர்ப்பெழுத வைக்கும் ஆற்றல் மிக்க அடாவடி மோடிக்கு, தனது உணவு விஷயத்தில் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று ஆர்டிஐயை ஆட்டுவிக்க முடியாதா? இவர் ஏன் ஆட்டுவிக்க வேண்டும். என்ன சொன்னால்…