Daily Archives: September 7, 2022

“தங்கமக்காலே” – கை.அறிவழகன்

“தங்கமக்காலே” என்ற சொல்லைக் கேட்டால் எனக்குக் காய்ச்சல் வந்து விடும், அதிலும் இரவு விளக்கின் ஒளியில் ஊடுருவி மரக்கிளைகளில் பட்டு எதிரொலிக்கும் அந்தக் குரல் ஒரு மாதிரிக் கிலியை உண்டாக்கும். அந்தக் குரலோடு கூடவே சர்ர்…. சர்ர்…. என்று தரையை உரசும் கோணிச் சாக்குப் பைகளின் ஓசையும், ஒரு அலுமினியத் தட்டின் ஒலியும் கூடுதல் நடுக்கத்தை வரவழைக்கும். எனக்கு மட்டுமில்லை ஏறக்குறைய குடியிருப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் “தங்கமக்காலே”யின் குரலைக் கண்டு குலை நடுங்கிப் போய் விடுவார்கள்,…

விந்தன் சிறுகதைகள் – 2

பொன்னையா ‘என்னா சின்னி! வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா. “நீயும் கேட்கிறயே! வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு நான் அவதிப்படறேன். குழந்தை வேறே பனியிலே படுத்துக் காலையிலேருந்து காயலாக் கிடக்குது. எனக்கு வேலையே ஒண்ணும் ஓடலே. அடிக்கிற காத்துலே இந்த அடுப்பு கொஞ்சமாச்சும் எரியுதா?” என்று எரிந்து விழுந்தான் சின்னி. “என்னை என்ன பண்ணச் சொல்றே. சின்னி? என் அப்பன் எனக்கு ஆஸ்தியா வச்சுட்டுப்போன அந்த…

வாழ்வியல் சிந்தனைகள் – 17 – ராதா மனோகர்

கனவுக்கு ஒரு பாலம்……அங்கே உங்களின் ஒரு விசுவரூபத்தை நீங்கள் தரிசிப்பீர்கள். கனவுகள் உண்மையானவையா? இறந்தவர்களுடன் பேச முடியுமா? ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா? எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா? நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா? எல்லாவற்றிக்கும் பதில்கள் ஒன்றுதான். ஆம் ஆம் ஆம். இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும். உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விசயங்கள்தான். இன்னும் சரியாக சொல்லப்போனால்…

நிம்ம‌தியைத் தேடி – Fazil Freeman Ali

அந்த‌ முதிய‌வ‌ரை க‌ண்டாலே ப‌ல‌ரும் த‌லைதெறிக்க‌ ஓடிவிடுவ‌ர். அவ‌ர் ந‌ட‌ந்துவ‌ருவ‌தை க‌ண்ட‌துமே சாலையின் ம‌றுபுற‌த்துக்கு சென்றுவிடுவார்க‌ள் ஊர்க்கார‌ர்க‌ள். அவ‌ருடைய‌ வீட்டுக்கு அருகேகூட‌ யாரும் செல்வ‌தில்லை. கார‌ண‌ம் ரெம்ப‌ சிம்பிள், ம‌னித‌ர் எப்போதும் எதிர்ம‌றை சிந்த‌னையுட‌னேயே இருப்பார், ச‌தா எரிந்துவிழுவார், திட்டுவார், யாராவ‌து ஏதாவ‌து ந‌ல்ல‌து செய்யும்போதுகூட‌, “ஆமா இவ‌ந்தான் உல‌க‌த்தையே மாத்த‌ப்போறானாக்கும்…” என்று சுருக்கென்று சொல்லிவிடுவார். அந்த‌ ஊரிலுள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்குக்கூட‌ “சிடுமூஞ்சி கிழ‌வ‌ன்” என்றால்தான் இவ‌ரைத்தெரியும். என்ன‌ ந‌ட‌ந்துச்சோ தெரிய‌ல‌, திடீர்னு ஒரு பெரும் மாற்ற‌ம். ஊரில்…

ஜெயலலிதா ஆட்சியில் போராடவே அஞ்சிய நிலையில் எங்களை முன்னிறுத்தி போராடிய திமுக இப்போது அடக்குவது ஏன்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளன. பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க விடாமல் அடக்கிக் கைது செய்து அசிங்கப்படுத்துகிறது திமுக அரசு https://youtu.be/2GsrvbJYTsY

இமானுவேல் நினைவு நாளுக்கு சொந்த வாகனத்தில் வரவேண்டும் என்பதா? அரசுக்கு கிருஷ்ணசாமி கண்டனம் #puthiya_thamizhagam

விடுதலைக்கு பிறகு தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து முதல் பலியானவர் இமானுவேல் சேகரன். அவருடைய நினைவுநாள் நிகழ்ச்சிக்கு சொந்த வாகனத்தில்தான் வரவேண்டும் என்று சொல்வது நியாயம் இல்லை… https://youtu.be/JfBN2tnFolo

பாஜகவின் தரந்தாழ்ந்த அரசியல் விளையாட்டுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை – #cpi #rmuththarasan #nallakannu

அரசியல் முதிர்ச்சியடைந்த மாநிலம் தமிழ்நாடு. இங்கே பாஜகவின் செருப்பு அரசியல் எடுபடாது. தமிழக மக்கள் கலவர சிந்தனைகளை ஏற்க மாட்டார்கள்… https://youtu.be/L7QZpMQ7Psw