Daily Archives: September 10, 2022

நிதியமைச்சர் பிடிஆருக்கு எதிராக அதிகாரிகள் சதி – ஜாக்டோ ஜியோ மாநாட்டுக்கு அவரை செல்லவிடாமல் தடுத்தது யார்?

இந்த தலைப்பு சிலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், முதல்வரைச் சுற்றியுள்ள அதிகாரிகளும், நிதித்துறை அதிகாரிகளும், நிதியமைச்சகத்தை சார்ந்துள்ள அனைத்து துறை அதிகாரிகளும் அமைச்சர் பிடிஆருக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசிங்கப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு இந்தச் செய்தியை தொடருங்கள். 100 நல்ல அதிகாரிகள் கிடைப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களைக் கொண்டு மாநிலத்தின் நிதி நிலையை சரிசெய்துவிடலாம் என்று நம்பினேன். ஆனால், எனது நினைப்பு பொய்யாகிவிட்டது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லியிருந்தார். நிதிநிலையை…

உலகின் செல்வாக்கான கரன்சி – கை.அறிவழகன்

சிலிர்க்க வைக்கிற குளிரும், அடர்ந்த மரக்கிளைகளில் இருந்து பெருகி வரும் காற்றுமாக இருந்த அந்த இரவை நான் நினைவு வைத்திருக்கிறேன். அந்த இரவு எல்லா இரவுகளையும் போலக் கடந்து போய் விடவில்லை. அந்த இரவின் மிக மென்மையான அடையாளங்களை என்னால் இப்போதும் உங்களுக்கு சொல்லிவிட முடியும். அந்த இரவில் நாங்கள் நடக்கையில் தெருவிளக்குகளின் பின்புறத்தில் மெல்லப் படிந்து கொண்டிருந்த இருள் பிச்சைக்காரர்களின் ரகசியமான அழுக்கு மூட்டைகளைப் போலக் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தேன். ஒரு கோவில் கோபுரத்தின்…

வாழ்வியல் சிந்தனைகள் – 18 – ராதா மனோகர்

இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்… Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame. We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I’m an optimist, and I believe we can,” he said. எமது வாழ்வும் இந்த பிரபஞ்சத்தின்…

அந்த‌ நூறு ஒட்ட‌க‌ங்க‌ள் – Fazil Freeman Ali

அன்வ‌ர் பிற‌ந்த‌து வ‌ள‌ர்ந்த‌து எல்லாமே ராஜ‌ஸ்தான் மாநில‌த்தில். ஓர‌ள‌வுக்கு வ‌ச‌தியான‌ குடும்ப‌ம்தான். அன்வ‌ர் பிற‌ந்த‌ கிராம‌ம் பாலை நில‌த்தை ஒட்டியிருந்ததால் இங்கு யாரும் பெரிதாக‌ விவ‌சாய‌ம் செய்வ‌து கிடையாது. கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் சிறு குறு தொழில்க‌ள்தான் அங்குள்ள‌ மக்க‌ளின் பிர‌தான‌ வாழ்வாதார‌ம். பால்ய‌ம் க‌ட‌ந்து இருப‌துக‌ளில் கால‌டியெடுத்துவைத்த‌ ம‌க‌னுக்கு பெற்றோர் ம‌ண‌முடித்து வைத்த‌ன‌ர். சில‌ ஆண்டுக‌ளில் த‌ந்தையானான் அன்வ‌ர். வெளிப்பார்வைக்கு எல்லாமே ந‌ன்றாக‌ போய்க்கொண்டிருப்ப‌து போல் தோன்றினாலும் அன்வ‌ருக்கு எப்போதும் ஏதாவ‌து க‌வ‌லைக‌ள் ம‌ன‌துக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.…