Daily Archives: September 14, 2022

கவலையடையச் செய்யும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்

கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ.4.6 துணை மாறுபாடு அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) கூறுகையில், இங்கிலாந்தில் தொற்று மாதிரிகளின் மொத்த பரிசோதனையில் பிஏ.4.6 மாறுபாடு 9% பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிஏ.4.6 மாறுபாடு வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரதத்திற்கு ஒரு பிறழ்வைக் கொண்டு செல்கிறது. இது நமது செல்களுக்குள்…

ஆம்புலன்ஸ் வரத் தாமதம்: ஜேசிபி இயந்திரம் மூலம் மருத்துவமனையில் அனுமதி!

மத்தியப்பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய ஒரு நபர், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஜேசிபி எந்திரம் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கி காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டியை மருத்துமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், காயம் பட்டவரை மீட்ட உள்ளுர் பஞ்சாயத்து உறுப்பினர், தனது ஜேசிபி இயந்திரத்தில் ஏற்றிச்சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ

மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் 2வது என்ஜினில் தீப்பற்றி புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானத்தில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 141 பயணிகளும், 6 பணியாளார்களும் அவசரகால வழி மூலம் விரைவாக இறங்கினர். அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாவும், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிவில் விமானப்…

சோனியா அகர்வாலுக்கு மீண்டும் திருமணமா?

நடிகை சோனியா அகர்வால் தமிழில் காதல் கொண்டேன், 7ஜி, கோவில்,புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அவர் இயக்குனர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பிறகு சோனியா அகர்வால் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் இரண்டாம் திருமணம் செய்கிறாரா என கேள்வி…

மாடர்ன் உடையில் கலக்கும் தேவயானி

தமிழ் சினிமாவில் 90களில் அழகு நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை தேவயானி. பாவாடை தாவணி அல்லது புடவையில் அழகாக நிறைய படங்கள் நடித்திருப்பார், அப்படி மாடர்ன் உடை அணிந்தாலும் பார்ப்பவர்களுக்கு எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் அணிவார். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்த தேவயானி ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறைய சின்னத்திரை பக்கம் சென்றார். கோலங்கள் என்ற தொடர் அவரை பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்த்தது. பின் திருமணம், குழந்தைகள் என…

பேனா மை லீக்கானதால் கோபப்பட்ட இங்கிலாந்து மன்னர்!!

வடக்கு அயர்லாந்தில் உள்ள ஹில்ஸ்பரோ கோட்டையில் பார்வையாளர் குறிப்பேட்டில் கையெழுத்திட்ட போது, பேனா மை லீக்கானதால் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கோபமடைந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பேனா மை லீக்கானதால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ், “இதையெல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது” என கோபத்துடன் கூறியவாறு இருக்கையிலிருந்து எழுந்துச் சென்றார். பின்னர், மன்னர் சார்லஸிடம் இருந்து அவரது மனைவி கமீலா பேனாவை வாங்கி கையெழுத்திட்ட போது, அவரது விரல்களிலும் லீக் ஆன மை ஒட்டியதால், பாதுகாவலர்…

ஈழத் தமிழர்களை நெகிழ வைத்த தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக முதன் முறையாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ள தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டராலினுக்கு இலங்கை தமிழர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர். அனைத்து அடிப்படை வசதிகளுடன் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்ராலின் தமிழ் நாட்டு சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதன்பிரகாரம் திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூரில் 17.17 கோடி ரூபா மதிப்பில்…

புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை…

வாழ்வியல் சிந்தனைகள் – 19 – ராதா மனோகர்

சந்தேகம் கொள்…கேள்வி கேள்…சிக்னல்களை சரியாக புரிந்து கொள்… அழகை ரசிக்கும் ஆற்றல் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது. இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது? பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின் அடிப்படையில்தான் பெரிதும்…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 14 – Fazil Freeman Ali

போர்ச்சுக்கிசிய‌ர், ட‌ச்சுக்கார‌ர்க‌ளை தொட‌ர்ந்து இந்திய‌ ம‌ண்ணில் கால்ப‌திக்க‌ வ‌ந்த‌ ஐரோப்பிய‌ர்க‌ள், ஆங்கிலேய‌ர்க‌ள். இவ‌ர்க‌ளும் ப‌டை ப‌ட்டாள‌ங்க‌ளோடு வ‌ந்து போரிட்டு நேர‌டியாக‌ நாட்டை பிடித்துவிட‌வில்லை. அப்ப‌டி வ‌ந்திருந்தால் ட‌ச்சுக்கார‌ர்க‌ளுக்கு திருவிதாங்கூரில் நேர்ந்த‌ க‌திதான் இவ‌ர்க‌ளுக்கும் ஏற்ப‌ட்டிருக்கும். வ‌ணிக‌ம் செய்ய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனி என்ற‌ பெய‌ரில் 1608-ல் குஜ‌ராத்தின் சூர‌த் துறைமுக‌த்தில் ந‌ங்கூர‌மிட்டது முத‌ல் ஆங்கிலேய‌ க‌ப்ப‌ல். The East India Company (EIC) என்பது 1600-ம் ஆண்டில் “ஒரு பகுதி அரசுக்கும் ஒரு பகுதி பெருவணிகர்களுக்கும்” என்ற அடிப்படையில்…

புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் எழுதிய வரலாற்றுத் தொடர்… அண்ணா பிறந்தநாளில் தொடங்குகிறது

இலங்கையின் தமிழர் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எழுதி, புழக்கத்தில் காணாமல் போன வரலாற்று புத்தகம் இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு. அந்த புத்தகத்தை மீண்டும் தொடராக வெளியிடுகிறது உதயமுகம் இணைய இதழ். அண்ணா பிறந்த நாளில் 15-8-2022 முதல் வெளிவருகிறது…

உதயமுகம் இணைய இதழில் வசிய எழுத்தாளர் கை.அறிவழகன் எழுதும் புதிய தொடர் தொடங்குகிறது…

வாழ்வின் வண்ணங்கள் என்ற தலைப்பில் வசிய எழுத்தாளர் கை.அறிவழகன் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அற்புத மனிதர்களையும், நிகழ்வுகளையும் உதயமுகம் வார இதழிலும் இணைய இதழிலும் தொடராக எழுதுகிறார்… 15-8-22 நாளைமுதல் தொடங்குகிறது…