Daily Archives: September 15, 2022

ஈவிரக்கமின்றி மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், பச்சையம்மன் தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சுரேஸ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள அத்தை வீட்டுக்கு பச்சையம்மாள் வந்த நிலையில், அங்கு வைத்து மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, சுரேஷ் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

நடுரோட்டில் அரசு பேருந்து ஓட்டுனர் செய்த வேலை

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் டிராக்டர் ஓட்டுனரை, மறித்து அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கம்பம் கூடலூரில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்றபோது, அதை டிராக்டர் ஒன்று முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி விட்டு, இறங்கி சென்ற பேருந்து ஓட்டுனர் , டிராக்டர் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது டிராக்டர் ஓட்டுனரின் சட்டையை நடத்துனர் பிடித்து கொள்ள, டிரைவர் அடாவடியாக தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பணம் கொடுக்காததால் காருக்கு தீ வைத்த நபர்!

உத்திரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள சதர்பூர் கிராமத்தில் கட்டுமான ஒப்பந்ததாரர், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகையான ரூ.2.68 இலட்சத்தை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, பெட்ரோலை எடுத்து வந்த தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் மீது ஊற்றி, தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து கட்டுமான ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இது குறித்து…

ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் சசிகலாவைப் பார்க்கிறார்களா?

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், சிரிக்காமல் ஜோக் அடிப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலட்சம் பேருக்கு வேலை: அரசின் அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த செப்.9ம் தேதி, மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை போன்று, இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தினை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல், பேனர்கள் அகற்றுதல் போன்ற பணிகள்…

மகாராணியாரின் சவப்பெட்டியின் மீது ஒளிக்கதிர்

இங்கிலாந்து மகாராணியாரின் சவப்பெட்டி, ஸ்காட்லாந்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை மகாராணியாரின் சவப்பெட்டி மீது விழ, அது தெய்வீக செயல் என்று கூறி, மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இங்கிலாந்து மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் வகையில், மகாராணியாரின் உடல் தாங்கிய சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக் கொண்டு…

ராஜபக்சாக்கள் பணக்காரர்களானது எப்படி? அம்பலப்படுத்தும் அமெரிக்கா

இலங்கை மக்களின் பணத்தில் ராஜபக்ச குடும்பம் தங்களை வளப்படுத்திக் கொண்டது என அமெரிக்காவின் செனட்டர் பற்றிக் லீஹி தெரிவித்துள்ளார். இரக்கமின்றி தங்கள் எதிரிகளை மௌனமாக்கியதுடன், இனப் பதற்றங்களைத் தூண்டி, நாட்டைப் பொருளாதாரச் சீர்குலைவுக்குள்ளாக்கியது எனவும் அவர் சாடியுள்ளார். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் துஷ்பிரயோகத்திற்குப் பின்னர், இலங்கைக்கு இன சகிப்புத்தன்மை, சமமான பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள அரசாங்கம் தேவை. அது அமெரிக்கக் கொள்கையின்…

பெண்களைக் கவரும் பொன்னியின் செல்வன் சேலை

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெண்களைக் கவரும் விதமாக தற்போது “பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சேலைகளில், “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் போர் வாள்கள் சேலை முழுவதும் நிறைந்து…

ஃபயர் புஷ்பாவாக மாறிய கோவை சரளா

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘கிக்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகை கோவை சரளா ‘ஃபயர் புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சேற்றில் அங்கப்பிரதட்ஷனம் செய்தவரால் ஏற்பட்ட பரபரப்பு (வீடியோ)

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ததை அடுத்து, சாலை எங்கும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளங்கள் நிறைந்த சாலைகளை விரைவில் சரிசெய்யுமாறு வலியுறுத்தி, நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். சமூக ஆர்வலர் ஒருவர் காக்கி உடை அணிந்தபடி, பள்ளங்கள் நிறைந்த சாலையில் அங்கப்பிரதட்ஷனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தென் கர்நாடகாவில் பிரபலமான உருளு சேவை எனப்படும் சடங்கு…

இலங்கை  இந்திய ஒப்பந்த வரலாறு – 1 – அமரர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்

1. செல்வா ஈட்டிய செல்வம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987 ஆக 29-ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவசரத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கை என்று இந்தியாவிலும், இலங்கையிலும் அரசாங்கங்கள் மீது குற்றங்காண விரும்பும் பலர் கூறுகின்றனர். இலங்கைத் தமிழ் மக்களைப் பாதிக்கும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுமுன் சம்பந்தப்பட்ட தமிழ் மக்கள் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. என்று சிலர் குற்றஞ் சாட்டுகின்றனர். இவற்றில் உண்மையுண்டா என்று புரிந்து கொள்வதற்கு…

வாழ்வின் வண்ணங்கள் – 1 – கை.அறிவழகன்

இமயத்தின் ‘பெத்தவன்’ சிறுகதை தஸ்தாவஸ்கியை ரஷ்யாவின் முதல் சமூக இலக்கியவாதி என்பார்கள், அவரது கதைகளில் வருகிற பாத்திரங்கள் நமது ஆழ்மனதில் ஒரு மென்மையான விசாரணையை முன்வைக்கும், மானுட மனத்தை சூழல் எப்படியான குழப்பங்களில் ஆழ்த்துகிறது என்பதை சுவாரசியமான விவரணைகளோடு அவர் விவரிக்கும் போது மனம் இனம் புரியாத முடிச்சுகளைப் போட்டுக்கொண்டும், அவிழ்த்துக் கொண்டும் நம்மை அலைக்கழிக்கும். வெண்ணிற இரவுகள் நாயகி அமர்ந்திருக்கும் ஆற்றங்கரை சிமெண்ட் மேடை, அதன் பின்னிருக்கும் மரங்களின் இலைகள், சலசலத்து ஓடுகிற ஆற்றின் நீர்த்திவலைகள் பக்கவாட்டில்…