Daily Archives: September 17, 2022

வாழ்வின் வண்ணங்கள் – 3 – கை.அறிவழகன்

அழியாச் சித்திரம்! இரண்டு உணர்ச்சிகரமான டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெறுகிற காலகட்டத்தில் நானும் அப்பாவும் டென்னிஸ் ஆடத்துவங்கினோம். அப்பாவின் கனவுகளும், செயல்களும் உலகளாவியதாகவும், மிக உயர்ந்ததாகவுமே இருந்து வந்திருக்கிறது. தந்தையாக இருப்பது பிள்ளைகள் வளர்கிற வரை மட்டுமான பொறுப்பல்ல, வாழ்நாள் முழுவதற்குமான பொறுப்பு என்று இன்றைக்கும் உணர்ந்தவர் அப்பா. இப்போதும் நாங்கள் அப்பாவை சந்திக்கிற பொழுதில் ஏதாவது ஒரு வழிகாட்டுதலையோ, நெறிப்படுத்தலையோ அவருடைய மூன்று குழந்தைகளுக்கும் தரக்கூடிய பணியை அவர் செய்து கொண்டிருப்பது புவிப்பந்தின் இயக்கத்தை,…

வாழ்வியல் சிந்தனைகள் – 21 – ராதா மனோகர்

பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்! கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் உருவானது. அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும். அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்? என்பது போன்ற கேள்விகளில் இருந்து நான் கொஞ்சம் விடுதலையானேன். அதன் பின்பு…

சும்மா கிடைத்ததா சுத‌ந்திர‌ம் – 16 – Fazil Freeman Ali

ப்ளைம‌த்திலிருந்து (Plymouth) ஆங்கில‌ ப‌டைக‌ளை வ‌ழிந‌ட‌த்திய‌ ஃப்ரான்சிஸ் ட்ரேக் (Francis Drake), ஸ்பேனிஷ் ஆர்ம‌டாவின் ப‌ல‌த்தை ஒற்ற‌ர்க‌ள் மூல‌ம் மிக‌ ந‌ன்றாக‌வே அறிந்திருந்தார். என‌வே நேர‌டி தாக்குத‌ல்க‌ளை கூடுமான‌வ‌ரை த‌விர்ப்ப‌து என்ப‌தை முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டார். இந்த‌ ட்ரேக் ஏற்க‌ன‌வே ப‌ல‌முறை தென் அமேரிக்க‌ நாடுக‌ளில் இருந்து செல்வ‌த்தை ஏற்றிவ‌ரும் ஐரோப்பிய‌ க‌ப்ப‌ல்க‌ளை அட்லான்டிக் ச‌முத்திர‌த்தில் வ‌ழிம‌றித்து சூறையாடிய‌வ‌ர். ஆங்கிலேய‌ர்க‌ளால் ஹீரோவாக‌வும் ஐரோப்பிய‌ர்க‌ளால் க‌ட‌ற்கொள்ள‌ய‌னாக‌வும் பார்க்க‌ப்ப‌டுப‌ட்ட‌வ‌ர். லிஸ்ப‌னிலிருந்து கிள‌ம்பிய‌ ஸ்பேனிஷ் ஆர்ம‌டா ஸ்பெய்னின் க‌டிஸ் துறைமுக‌த்தில் (Spanish port…

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 3 – அமரர் திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

3. பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசின் கொள்கை 1977-ம் ஆண்டு இலங்கையில் ஜயவர்த்தனா அரசும் டெல்லியில் மொரார்ஜி தேசாய் அரசும் ஆட்சிக்கு வந்தன. இரண்டும் வலதுசாரி அரசுகள். இரு பிரதமர்களுக்குமிடையில் கருத்தொற்றுமையும் நட்புறவும் நிலவியது. 1978-இல் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மொரார்ஜி தேசாயை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பார்த்து இலங்கைத் தமிழரின் நிலை, 1977-ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கு எதிரான தாக்குதல்கள், நாம் தமிழ் ஈழம் கோருவதற்கான காரணங்கள் ஆகியவற்றை…

மகளை பலாத்காரம் செய்த தந்தை: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கேரளாவில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த திருவனந்தபுரம் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தையை போலீசார்…

முதல் மனைவியின் கிட்னியை திருடி 2வது திருமணம் செய்த கணவன்

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (வயது 34). இவர் அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார். அப்போது அங்கு அவருக்கு…

சீனாவில் கால்பதிக்கும் குரங்கம்மை!

சீனாவில் முதலாவது குரங்கம்மை தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷொன்கிங் நகரத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட குறித்த தொற்றாளர் வெளிநாடு ஒன்றில் இருந்து அங்கு சென்றவர் என தெரியவந்துள்ளது. குறித்த தொற்றாளர் சீனாவுக்குள் நுழைந்த மாத்திரத்தில், அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை காரணமாக சமூகத்தில் தொற்று பரவும் சாத்தியம் இல்லாமல் போனதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மங்கிபொக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று முதன்முதலாக ஆபிரிக்க வலயத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் சுமார் 61 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று…

1 2 3