சக மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாக மாணவி கைது – நள்ளிரவில் போராட்டம்
பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர். என்ன நடந்தது? பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர் பல்கலைக்கழகம் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்…