Daily Archives: September 19, 2022

வாழ்வியல் சிந்தனைகள் – 22 – ராதா மனோகர்

உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள் இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை. நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள். ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. இது கொஞ்சம் இடக்கு மிடக்கான கருத்தாக தோன்றலாம். இவர்களின் பகுத்தறிவு…

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 4 – அமரர்.திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

4. 1980-ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சி! திருமதி இந்திரா காந்தி 1980-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் பிரதமராக வந்தார். அவரைச் சந்தித்து ஏறத்தாழ இரண்டு மணித்தியாலம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் தமது அனுதாபத்தை வெளிப்படையாகவே கூறினார். ஆக்க பூர்வமான பல ஆலோசனைகளையும் தந்தார். 1981 82-ஆம் ஆண்டுகளிலும் அவரையும் அவருடைய அரசின் வெளியுறவு அமைச்சராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினேன். இதற்கிடையில் இலங்கை அரசின் அடக்கு முறையினால் இலங்கையை விட்டு…

இலங்கையை மையப்படுத்தி சீன- இந்திய வல்லாதிக்கப் போர் – வென்றது யார்?

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக, சீனாவைப் பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, சிறிலங்காவிற்கு கடனாக வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது. இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் தொன் யூரியா உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையுடன் நெருங்கிய…

55 பேட்டரிகளை விழுங்கிய பெண்: ஒரே நேரத்தில் வயிற்றில் இருந்த பேட்டரிகளை அகற்றி மருத்துவர்கள் சாதனை!

அயர்லாந்து நாட்டில் பெண்ணின் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர். 66 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் செயலில் 50க்கும் மேற்பட்ட ‘ஏஏ மற்றும் ஏஏஏ’ ரக பேட்டரிகளை விழுங்கியுள்ளார். அயர்லாந்து மருத்துவ நாளிதழான ‘தி ஹப் போஸ்டில்’ வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையின் படி, டப்லின் நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில்…

விமானத்தில் பயணித்த பயணி கறுப்புப் பட்டியலில்: ஏன் தெரியுமா? (வீடியோ)

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பி.கே.-283 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. குறித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார். இதன்பின்னர், இருக்கைகளை கைகளால் குத்தியும், விமான ஜன்னலை சேதப்படுத்தும் நோக்கில், கால்களால் கடுமையாக உதைத்தும் உள்ளார். இருக்கைகளின் நடுவில் பயணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புற படுத்து கொள்வது போன்ற…

தைவான் மீது சீனா படையெடுத்தால் என்னவாகும்?

தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கப் படையினர் தைவானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவார்கள் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், சீனா தைவான் மீது தாக்குதல் தொடுத்தால் அமெரிக்கா தலையிடுமா என்ற கேள்விக்கு, ஆம் அமெரிக்கப் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் நடைபெறும் போரில் தலையிடுவது என்பது அமெரிக்க அரசு கொள்கையில் இல்லை என்று ஏற்கனவே வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 6 இளைஞர்களின் வீடுகளுக்கு நேர்ந்த கதி!

மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் 16 வயது மைனர் சிறுமி ஒருவர் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேவா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நைகர்ஹி பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது.இந்த வழக்கில், மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் கூற்றுப்படி, அவர் சனிக்கிழமை மதியம் ஒரு நண்பருடன் கோவிலுக்குச் சென்றுள்ளார். கோயிலுக்குச் சென்றுவிட்டு இருவரும் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது…