Daily Archives: September 21, 2022

அம்பேத்கர் ஹீரோ, காந்தி வில்லனா? வரலாறு என்ன சொல்கிறது? – ஆதனூர் சோழன்

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது. அதைத் தொடர்ந்து இந்திய வைஸ்ராய் தனக்கு உதவியாக ஒரு நிர்வாக குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் அம்பேத்கரையும் இணைத்துக் கொண்டார். அம்பேத்கர் தொழிலாளர் நலத் துறைக்கு பொறுப்பு ஏற்றார். இந்தச் சமயத்தில்தான் வேலைவாய்ப்பு நிலையங்களை உருவாக்குவது என்று முடிவு செய்தது. அப்போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. காந்தி கைது செய்யப் பட்டு ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட் டிருந்தார். அந்த சூழ்நிலையில் 1943 ஆம் ஆண்டு…

வாழ்வின் வண்ணங்கள் -5 – கை.அறிவழகன்

உயிர்களின் வாசம்! வீட்டின் பழைய ஆடைகள் இருக்கும் அலமாரியைத் திறந்து பார்க்கும் போது ஒரு “டிஷர்ட்” கண்ணில் பட்டது, அந்த “டிஷர்ட்” எனக்குப் பிடிக்காத நிறம் கொண்டது, அது வீட்டுக்கு வந்த நாளில் மனதளவில் பெரிய தாக்கங்கள் ஏதுமில்லை, உறவினர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வரும்போது கொண்டு வந்து கொடுத்தார். அவர் போன பிறகு அம்மாவிடம் நான் கோபமாக இப்படி சொன்னேன். “எதுக்கும்மா, இந்த பிளாட்ஃபார்ம் துணியையெல்லாம் இவர் கொண்டு வந்து நமக்குக் கொடுக்கிறார்?” அன்று அம்மா…

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 5 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

டெல்லியில் உலகின் கவனத்தை தமிழர் பக்கம் திருப்பிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்… அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் (இலங்கை முன்னாள் எதிர்கட்சி தலைவர்) இந்த சூழ்நிலையில் இலங்கைக்குத் தன் வெளிநாட்டு அமைச்சர் திரு. நரசிம்மராவ் அவர்களை அனுப்பினார் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி. ஜூலை 29-ந் திகதி இந்திய அமைச்சரின் வருகைக்குப் பின் தான் ஜனாதிபதி ஜயவர்த்தனா நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். இதைத் தொடர்ந்து இந்திரா அம்மையாரைத் திருப்திப் படுத்துவதற்காக தன் சகோதரர் திரு.…

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க மு.க ஸ்டாலின் கோரிக்கை!

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதவிர ஏற்கனவே 95 படகுகளும் 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை…

முகப் பொலிவைத் தரும் முட்டை வெள்ளைக்கரு!-

முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சரும சுருக்கம், எண்ணெய் பிசுபிசுப்புதன்மை, முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும். சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ளவும் துணை புரியும். முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் ஆற்றல் இருக்கிறது. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.…

பிரதமர் அலுவலகம் அருகே இளைஞன் தீக்குளித்ததால் பரபரப்பு

ஜப்பானில் பிரதமர் அலுவலகம் அருகே வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார். உடலில் தீ எரிந்தபடி ஓடிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர். பின்னர் சுய நினைவை இழந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.…

லாரி ஏறியதில் சாலையோரம் தூங்கிய 4 பேர் பலி

டெல்லியில் சாலையோரத்தில் தூங்கிகொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டெல்லியில் சீமாபுரியில் நள்ளிரவு 1.51 மணியளவில் டிடிசி டிப்போ ரெட்லைட்டைக் கடக்கும் போது, அடையாளம் தெரியாத வேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

எகிப்தியர்களின் மம்மிகள் பழமையானவை அல்ல: வெளியாகும் புதிய தகவல்கள்

எகிப்தியர்களின் மம்மிகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் பழைமையானவை என்று கூறமுடியாது. சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் வாழ்ந்த சின்சோர்ரோ மக்கள்தான் முதன்முதலாக, 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடலை மம்மியாக செய்துள்ளனர். பூமியின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில், எகிப்தியர்களின் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகளை விடப் பழைமையான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தியர்கள் உயிரிழந்தவர்களை மம்மியாக மாற்றும் பிரபலமான கலாசாரத்தைக் கொண்டிருந்தாலும், அதைச் செய்த முதல் மக்கள் அவர்கள் இல்லை. “சிலியின் வடக்குப் பகுதியிலும்…

உலகின் ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பு

உலகின் ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பதாக 75  நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 345 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியில் உள்ளதாகவும், இது 2019 ஆம்ஆண்டு முதல் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளிவராத மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மாட்சிமை தங்கிய ராணியின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கு பின்னர் மேலும் ஒரு வாரம் அரச துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மன்னர் விருப்பம். அரச துக்கம், அரச குடும்பத்தினரால், பணியாளர்களால், படையினரால் கடைபிடிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அரச…

ரஸ்ய இராணுவத்தை அணி திரட்ட ரஸ்ய அதிபர் முடிவு

ரஸ்ய இராணுவத்தை அணி திரட்டவும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என அதிபர் புடின் அறிவித்துள்ளார். ரஸ்ய அதிபர் புடின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 24-ம் தேதியன்று உக்ரைனில் தொடங்கிய போரானது, முடிவு ஏதும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனும் தாக்குப்பிடித்து ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில், ரஸ்ய அதிபர் விளாடிமிர் புதின் இராணுவத்தை அணிதிரட்டல் தொடர்பான கோப்புகளை கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில்,  ரஸ்ய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவத்தை அணிதிரட்டலை…

ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் பதவி ஆசையே இல்லையாம்: சொல்கிறார் கோட்டா!

அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், எனக்குப் பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் யார் முடிவு எடுத்தது?” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார் “நான் பதவி ஆசை பிடித்தவன் என்றால் ஜனாதிபதிப் பதவியிலிருந்தே விலகியிருக்கமாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று ஆர்வம் காட்டி வருகின்றது எனவும், குறித்த கட்சியின் பிறிதொரு குழு…