Daily Archives: September 22, 2022

சிந்தனைக் களம் – 2 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

புரிதலின்றி விமர்சனம் செய்வது தவறு. கலாச்சார வேறுபாடுகளை, அடுத்தவரின் குடும்ப சூழ்நிலையை இராஜகுடும்பமாக இருந்தாலும் சரி, சரியான புரிதலின்றி பேசுதல் தவறு. தவறாக அர்த்தப்படுத்தப்படும் தொடர்ச்சியற்ற படங்களை பகிர்தல் தவறு. முன்பின் என்ன நடந்தது எனத் தெரியாமல் முடிவுகளை எடுத்து விமர்சிப்பது தவறல்லவா? அதனைப் பற்றி சிந்தித்ததுண்டா? உதாரணமாக எமது திருமணங்களில் மாப்பிள்ளைத் தோழன் மணப்பெண் வரும்வரை மணவறையில் இருப்பார். எமது கலாச்சாரத்தை சம்பிரதாயத்தை புரியாதவர்கள் ஓர்இனத் திருமணம் என இலகுவாக விமர்சிக்கலாம். புரிகிறதா? சிந்திக்கலாமே! இப்படி…

வாழ்வியல் சிந்தனைகள் – 23 – ராதா மனோகர்

Thought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங்களுக்கான அழைப்பிதழ்கள்தான். உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன. உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும். ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது. இதை…

கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலக் கப்பல்

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிகாலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை இஸ்லாமியர்கள் தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதாகவும், அப்போது கொதிகலனை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாயிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது 1200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விபத்து நடத்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். இந்த கப்பல் வால்நெட் மரங்களால் கட்டப்பட்டுள்ளதாகவும் இது சுமார் 25 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்…

முதன்முறையாக இலங்கை இராணுவத்திற்கு அதிரடி தண்டணையை வழங்கிய ஐ.நா

போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள் ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமீறி குறித்த 58 இராணுவ அதிகாரிகளும் 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சர்வதேச சட்டம் பொருந்தும்…

ஓபிஎஸ் வழியைப் பின்பற்றும் ஆர்.பி.உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே தலைமை யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானாலும் தலைமை சர்ச்சை தொடர்வதால் இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவை அதிகரித்து வரும் இருவரும் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை கைப்பற்ற தொடர்ந்து போட்டா போட்டி நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள்…

எம்.ஆர். ராதாவின் சிறை அனுபவங்கள் – 1 – விந்தன்

1.‘ஒவ்வோர் கலைஞர்கள்’ சிறையில் இருந்தபோது, ‘பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகி விடலாம்‘ என்று நீங்கள் நினைத்ததுண்டா?” “இல்லை; நான் யாருடைய தயவிலும், சிபாரிசிலும், கருணையிலும் எப்போதுமே வாழ்ந்தவனுமல்ல; வாழ் நினைப்பவனுமல்ல?” “முதல்வர் கருணாநிதியைப் பற்றி…” “ஒரு காலத்தில் அவர் என் கம்பெனி ஆக்டர்; இன்று இந்த நாட்டின் முதலமைச்சர். என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராயிருக்கிறார் என்றால் அதிலே எனக்குப் பெருமைதானே?” “சரி, கலை உலகத்துக்கு வருவதற்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” “வீட்டுக்கு அடங்காத…

திடீரென கரை ஒதுங்கிய 235 ‘பைலட்’ திமிங்கலங்கள்

அவுஸ்திரேலியாவின் டாஸ்மானிய மாநில கடற்கரையில் கரை ஒதுங்கிய 200 பைலட் இன திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. நேற்று டாஸ்மானியாவின் ஓஷன் கடற்கரையில் 235 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒவ்வொன்றும் சுமார் 2,500 கிலோ எடையுள்ளதால் அவற்றை தூக்கிச்சென்று கடலில் மிதக்க வைப்பது பெரும் சவாலாக இருந்தது. 200 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் எஞ்சியுள்ள 35 திமிங்கலங்களை மீட்பு குழுவினர் சிரமப்பட்டு கடலுக்குள் தள்ளி பின் படகுகளுடன் இணைத்து ஆழ்கடலுக்கு சென்று அவற்றை விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு- முதலமைச்சர் ஆணை

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார் தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினைகளைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011-ம் ஆண்டு ரூ.1000-ஆக…

ஈரானில் ஹிஜாப்பை தீயிட்டுக் கொளுத்தும் பெண்கள் – என்னதான் நடக்கிறது?

ஈரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைதுசெய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். ஐந்தாவது நாளாக தொடரும் இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிவரும் நிலையில், சரி நகரில் நடந்த போரட்டத்தில் பெண்கள் தங்களுடைய ஹிஜாப்பைத் தீயிட்டுக் கொழுத்தினர். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் அதனை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். வட மேற்குப்பகுதியான உர்மியா, பிரன்ஷாஹர் மற்றும் கெர்மன்ஷாவில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களில் ஒரு…

ரஸ்ய அதிபரைக் கண்டித்த பைடன்

தற்போது நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை அமர்வில் பல்வேறு நாட்டு தலைவர்களும் உரையாற்றி வருகின்றனர். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். உணவுப் பாதுகாப்பின்மை, மோதல்கள், இயற்கை பேரழிவுகள் உட்பட உலகம் முழுவதும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு அதிபர் பைடன் உரையை தொடங்கினார். யுக்ரேன் போர் யுக்ரேன் விவகாரம் குறித்துப் பேசும்போது, கடந்த ஆண்டு உலகம் மிகப்பெரும் எழுச்சியையும், ஒரு மனிதரால் தொடங்கப்பட்ட தேவையற்ற போரையும் சந்தித்தது என்றார் பைடன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்…

பச்சை நிறமாக மாறிய கடல் நீர்: எங்கே எப்படி தெரியுமா?

மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேல் கடல் நீரின் நிறம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் பெரியபட்டிணம் வரையிலான பகுதியில் பச்சை நிறப் பூங்கோரை பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வந்து கரை ஒதுங்க…

டைனோசர் காலத்திற்கு முற்பட்ட ஜெல்லி மீன்கள் இலங்கையில்!-

இலங்கையில் டைனோசர் காலத்துக்கு பல மில்லியன் ஆண்டுகள் முன்பாக உருவானவை என்று நம்பப்படும் ஜெல்லி மீன்களை வயம்ப பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது. மேலும், இந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் இலங்கையின் கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, பூமியில் டைனோசர்களுக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்தவை என்று வட மேல்…