Daily Archives: September 23, 2022

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 6 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

இந்திய மாநிலங்களுக்கு இணையான அதிகாரம் 16-ந் திகதி டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட அகில உலக பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு மகாநாடு கூட்டப் பட்டது. பல மணித்தியாலங்கள் அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து எமது பிரச்சனையையும், அதற்கான பரிகாரத்தையும் பாரறியச் செய்ய ஒரு வாய்ப்பை இந்திய அரசே ஏற்படுத்தி கொடுத்தத. அப்பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு டாக்டர். நீலன் திருச்செல்வம் தலைமை தாங்கினார். அதே தினம் ராஜ்யசபையில் திருமதி இந்திரா காந்தி பேசும்போது இலங்கையில் இனக்கொலை (Genocide) நடப்பதாகக் கூறி உலகின் முன்…

விந்தன் சிறுகதைகள் – 4

கடவுள் என் எதிரி அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந் தனியாக உட்கார்ந்து, நான் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள். நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, “சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்.’’ “உங்கள் பெயர்?” “சஞ்சீவி.’’ “தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்…” “என்ன உதவி?” “என் அண்ணாவை உங்களுக்குத் தெரியுமோ?’’…

ஒரு மணிநேரம் தேடியும் கிடைக்கவில்லை! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் -எம்.பிக்கள் கேலி

எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என எம்.பிக்கள், பா.ஜனதாவை கேலி செய்துள்ளனர். 95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூரும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா,ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக…

இலங்கையில் இராவணனும் இல்லை; சிவ வழிபாடும் இல்லை- வன்மத்தைக் கக்கிய அமைச்சர்

இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை. சிவ வழிபாடும் கிடையாது” என்று தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலுள்ள கடைகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதற்கு ஆலய பரிபாலன சபையே விரும்பும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்துக்கே எனவும் கூறினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்…

யாழிற்கு இந்தியாவிலிருந்து ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்

“யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்காக எமது தரப்பில் இருந்து செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஆனால் விமானங்கள் வருவதில்லை. எனவே, இந்தியாவிலிருந்து ஒரு விமானத்தையாவது கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு யாழ்ப்பாணம்…