எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 19 – விந்தன்
19. கண்கண்ட தெய்வம் “யார் யாருக்கோ, யார் யரோ ‘கண் கண்ட தெய்வம்‘னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரையிலே எனக்குக் ‘கண் கண்ட தெய்வம்‘ கணேசய்யர்தான். அவரோ செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ்; நானோ சாதாரண நடிகன். எனக்கும் அவருக்கும் அப்படியொரு அன்புப் பிணைப்பு எப்படி ஏற்பட்டிருக்க முடியும்னு இன்னும்கூட நான் யோசிச்சுப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்; புரியல்லே, ஜுட்ஜுன்னா சாதாரண ஜட்ஜா? இல்லே; மற்ற ஜுட்ஜுகளுக்கு ‘சிம்ம சொப்பன’ மாயிருந்த ஜட்ஜ். அந்த நாளிலே தீர்ப்பு எழுதறதிலே அவர்தான் மன்னன்னு…