Daily Archives: October 1, 2022

வாழ்வின் வண்ணங்கள் – 8 – கை.அறிவழகன்

அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது. காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா. வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும். சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது. அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்…… கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா. ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித்…

மருத்துவத்துறையில் இட மாறுதலுக்கு உலவும் ரேட் கார்டுகள் – Ravishankar Ayyakkannu

ஆவின் பால் ஒரு லிட்டர் 40 ரூபாய் என்பது போல், தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையில் சில rate cardகள் உலவி வருகின்றன. செவிலியர் இட மாற்றம் – 3 முதல் 4 லட்சம் மருத்துவர் இட மாற்றம் – 5 முதல் 6 லட்சம் மருத்துவர் Deputation – 6 முதல் 8 லட்சம். சென்ற அதிமுக ஆட்சியில் ஒட்டு மொத்தமாகவே அனைத்து இட மாறுதல்களும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு தந்தார்கள். இந்த ஆட்சியில் வெளிப்படையாக கலந்தாய்வு…

முதுமையும் சுய‌ம‌ரியாதையும் – Fazil Freeman Ali

ப‌ல‌ முறை போல‌ந்து வ‌ந்திருக்கிறேன், ஒரே வ‌ருட‌த்தில் மூன்று முறை வ‌ந்த‌தெல்லாம்கூட‌ உண்டு. ஜோன்னாவுக்கு எப்போதுமே இது visiting back home, என‌க்கோ ஒவ்வொரு முறையும் விடுமுறைதான். எங்க‌ள் விமான‌ம் எப்போதும் த‌ரையிற‌ங்குவ‌து கிடானான்ஸ்க் (Gdansk) ந‌க‌ர‌த்தில். அங்குதான் ஜோன்னாவின் இளைய‌ ச‌கோத‌ரி மீர்க்க‌ல‌வ்சிகா வீடு. நாங்க‌ளே ஒரு டாக்சி எடுத்து வீட்டுக்கு வ‌ந்துவிடுகிறோம் என்றாலும் கேட்காம‌ல் எப்போதும் ஏர்ப்போர்ட்டுக்கு வ‌ந்துவிடுவார் இந்த‌ பாச‌க்கார‌ முன்று குழ‌ந்தைக‌ளின் தாயார். இங்கு சில‌ நாட்க‌ள் த‌ங்கிவிட்டு மால்போர்க் (Malbork)…

விந்தன் சிறுகதைகள் – 8

கவலை இல்லை அந்த ஊரில் அரியநாயகத்தின் செருப்புக்கடைதான் பேர் போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம் தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு வளர்த்து வந்தான். காத்தானிடமிருந்து முக்கால் ரூபாய்க்கு வாங்கிய செருப்பை மூன்றரை ரூபாய்க்கு விற்றுச் சம்பாதித்த லாபத்தைக் கொண்டு தான் அரியநாயகம் தன்னுடைய டாம்பீக மான வாழ்க்கை கையை நடத்திவந்தான். காத்தானுக்கு ஒரே ஒரு பெண். அவளை அவன் கானாற்றில் கட்டிக்…

சிந்தனைக் களம் – 6 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

தான் பேசும் வார்த்தைகளை தன் காதுகள் செவிமடுக்க, மூளை கிரகிக்க, இதயம் அதன் தன்மையை உணர ஆரம்பிக்கும் போது மனிதன் தன்னைத்தான் உணர்ந்து, மனிதன் மனிதனாக முமுமையடைய ஆரம்பிக்கிறான். அங்கேதான் நான் நேர்மையான மனிதன் என்ன அழகான உணர்வு ஆரம்பமாகிறது. அது பல உன்னதமான பயணத்திற்கு வழிகாட்டியாக மாறுகிறது. நேர்மை உண்மையுடன் புத்திசாலித்தனம் வேண்டும். அல்லது ஏமாற்றங்களும் வலிகளுமே மீதமாகும். என்னால் கஷ்டப்பட முடியாது அதனால் நேர்மையாக வாழ முடியாது என்பதை விட, உங்கள் உலக அறிவை(…

இந்திய ஒப்பந்த வரலாறு – 10 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

10.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மொழிவாரி அரசாக அமரர் .அ.அமிர்தலிங்கம்: டெல்லி உடன்படிக்கை! இந்த இருதலைவர்களின் மறைவினால் எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டதென்பதை யாரும் மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் நடை பெறும் சம்பவங்களை எமக்கு ஒவ்வொரு நாளும் தொலை பேசியில் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரு. ஆலாலசுந்தரம். எமக்கு மாத்திரமின்றி உலக மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தில் செய்தி நிலையமாக விளங்கியவர் ஆலாலசுந்தரம் என்று இக் கொலைச் செய்தியைப் பிரசுரித்த இங்கிலாந்து…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 11 – ராதா மனோகர்

11. திராவிட தேசங்களை வெற்றி கொண்ட செருக்கு வழுக்கியாற்றை வேடிக்கை பார்க்க போய் புத்தூர் நம்பியிடம் பிடிபட்ட பார்பனர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு தெரியவில்லை. ஒரு மாளிகையில் கைதிகளாக ஆனால் போதிய வசதிகளோடு தடுத்து வைக்கப்பட்டார்கள். இனி தொடர்ந்து பிடிபடப்போகும் பார்பனர்களுக்கும் சேர்த்து பெரிய அளவில் சில கரந்துறை காப்பகங்கள் பாக்கியத்தம்மாளின் ஆலோசனைப்படி புத்தூர் நம்பியால் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பாலாவோரை மக்களை ஆழம் பார்க்கவென கிளம்பிய பல பார்ப்பனர்கள் திடீர் திடீர் என்று காணமல்…