Daily Archives: October 5, 2022

வாழ்வின் வண்ணங்கள் – 9 – கை.அறிவழகன்

சைக்கிள் முதன்முதலாக ஒரு புத்தம்புதிய சைக்கிளை பள்ளிக்கு ஓட்டிச் செல்வது என்பது வாழ்வின் மகத்தான அனுபவமாக இருந்தது, பளபளக்கும் சிவப்பு நிறத்தில் அந்த சைக்கிளை வீட்டு வேப்பமரத்தின் முன்பாக, அப்பா நிறுத்திய போது உண்டான உணர்வுகளை இப்போதும் என்னால் நினைத்துப் பார்க்க முடியும். கொண்டாட்டமும், பெருமிதமுமாய் தவித்தபடி நான் அங்குமிங்குமாய் ஒரு பூனைக்குட்டியைப் போல அலைந்து கொண்டிருந்தேன், அப்பா, சைக்கிளை நான் ஓட்டிச் செல்வதற்கான பாதுகாப்பு விதிகளை நீண்ட நேரமாக அன்றைய இரவில் பிரசங்கம் செய்துவிட்டுப் படுக்கப்போனார்.…

ஹிந்துமதம் பெண்களைப் போற்றுகிறது… நம்புங்கள்! – Dhinakaran ChelliahR

இந்தப் பதிவிற்கும் திரு.ஆ.ராசா மற்றும், திருமா அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழைய நூல்களில் உள்ளவை இப்போது தேவையா என்கிறவர்கள் இப்பதிவை தவறாமல் வாசிக்கவும். சமத்துவம் விரும்புகிறவர்களும், மனிதநேயம் விரும்புகிறவர்களும், மதம் தாண்டி சிந்திக்கிறவர்களும் கண்டிப்பாக வாசிக்கவும். அனைத்தையும் சாதீ ரீதியாக பார்த்தே பழக்கப்பட்டுப் போன சமூகத்தில் வன்கொடுமை மட்டும் பெண்ணுக்கானது என தனித்து எப்படிப் பார்க்க இயலும்? இதுவரை பட்டியலினப் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை எதிர்த்து, பட்டியலினத்தவர் அல்லாத எத்தனை பேர்…

இலங்கை இந்தியா ஒப்பந்த வரலாறு – 11 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

சகோதர போராளிகள் படுகொலை.. கலைஞர் உட்பட நாம் நம்பிக்கை இழந்தோம்… அமரர். திரு.அ.அமிர்தலிங்கம் : இந்த திட்டத்தை டெல்லி சென்று நேரில் கையளித்ததோடு பல மணித்தியாலங்கள் வெளிநாட்டு அமைச்சரின் செயலாளரோடும் ஏனைய அதிகாரிகளோடும் உரையாற்றினோம். எமது முயற்சி விரும்பிய பயனைக் கொடுத்தது. இந்திய அரசின் போக்கில மீன்டும் எமக்குச் சார்பான மாற்றம் தோன்றியது. “இலங்கை அரசின் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விரிவான ஆக்கப்பூர்வமான மாற்று திட்டத்தைக் கொடுத்திருக்கின்றது’ – என்று பத்திரிகைகளுக்குக் கூறிய திரு ராஜீவ்…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 12 – ராதா மனோகர்

12. தன் கை கொண்டே தன் கண்ணை மூடிய அரசர்கள்! புத்தூர் நம்பியின் முகாமில் ஏராளமான பணியாளர்கள் போர்கருவிகள்  தயாரிப்பில் முழுவீச்சுடன் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போர் கருவிகளின் அவசிய தேவை தற்போது இருப்பதாக நம்பியோ, பாக்கியத்தம்மாளோ  கருதவில்லை. ஆனால், எதிர்கால அரசியல் சூழ்நிலைகள் எந்த திசையில் செல்லும் என்பதை எவராலும் எதிர்கூற முடியவில்லை. தற்போது பார்ப்பன சமய மேலாதிக்கம் அயலில் உள்ள பல தேசங்களிலும் பரவி வருகிறதே? எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.…

சிந்தனைக் களம் – 7 – பாமினி ராஜஸ்வரமுதலியார்

தனது சரி பிழைகளை உணராதவர்கள் தன்நிலை அறிவதில்லை. மற்றவர்கள் மேல் குற்றம் சாட்ட முன்பு தன்னைத்தான் திரும்பிப் பார்ப்பது அவசியம். தன் பிழைகளை மறைக்க அடுத்தவரை அவமானப்படுத்தி, மற்றவர் கவனத்தை திசை திருப்புவதால் செய்த தவறு இல்லாமல் போய்விடுமா? எனது பதிவுகள் மனச்சாட்சியை தட்டி எழுப்பவும், சிந்திக்க வைக்கவும் எழுதுகிறேனே அன்றி குறை குற்றம் கூற அல்ல. திருந்துவதற்கு முதலாவது படி உணர்தலாகும். தவறுகளை செய்யாத மனிதர்கள் இப்பூமியில் இல்லை. அதுவே மனிதர்களை பதப்படுத்தி பண்படுத்துகிறது. அதனால்…

ஈரான் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் திருப்புமுனை – பள்ளி மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர் – Rishvin Ismath

ஈரானிய இஸ்லாமிய அரசுக்கு எதிராக சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கடந்த வாரம் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாடசாலை மாணவ, மாணவிகளும் இணைந்து கொண்டார்கள். ஈரானின் பல பகுதிகளிலும் இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவிகள் பங்கெடுத்துள்ளனர், அவற்றில் சில ஆர்ப்பாட்டங்களின் காணொளிகளின் தொகுப்பு இங்கே இணைக்கப் பட்டுள்ளது. ஈரானின் கரஜ் நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவிகள் தமது ஹிஜாபை கழட்டியதுடன் அங்கே வருகை தந்திருந்த ஈரான் இஸ்லாமிய…

பொன்னியின் செல்வன் சினிமாவும் பாண்டிய நாட்டு பாமரனும் – நந்தன் ஸ்ரீதரன்

எனக்கும், அரிக்கும் இடையில் நடந்த பல்வேறு உரையாடல்கள் மிக சுவாரசியமாக இருக்கும்.. அப்படியாக ஒரு முறை இந்த அரண்மனைகள் பற்றிய பேச்சு வந்தது.. எங்க ஏரியாவில் நிறைய ஜமீன் அரண்மனைகளைப் பார்த்திருக்கிறோம்.. அவை கம்பேரிட்டிவ்வாகப் பார்த்தால் தற்போதைய பெரிய வீடுகளை விட வசதியில் குறைந்தவை.. கல்லும் காரையும் வைத்து கட்டப் பட்டிருக்கும்.. அதிக பட்சம் பத்து அறைகள் இருக்கலாம்.. ஆனாலும் அந்த அறைகள் எல்லாம் எளிமையான சின்ன சின்ன அறைகளாகத்தான் இருக்கும்.. தவசங்கள் எனப்படும் தானியங்கள் போட்டு…