விந்தன் சிறுகதைகள் – 16
விதி வென்றதா? இன்று நேற்றல்ல; என்றுமே தன் முதுகில் ஏதாவது சுமந்து கொண்டு வந்தால் தான் சுப்பன் எஜமான் வீட்டுக்குள் நுழைய முடியும். உதய சூரியன் உச்சி வானத்துக்கு வரும் வரை அவன் உள்ளமும் உடலும் சோர வயலில் உழைத்துவிட்டுப் பசிக்குக் கூழ் குடிக்க வந்தால்கூட, அவனுக்கு ‘வரவேற்பு’ வாசலோடு தான்! இந்தச் சம்பிரதாயத்தை யொட்டி, அன்றும் வாசலில் நின்றபடியே,”அம்மா!” என்று இரைந்தான் அவன். ‘’யாரடா,அது?’ என்று ‘டா’ போட்டுக் கேட்டாள் உள்ளே இருந்த எஜமானியம்மாள். வயதில்…