Daily Archives: October 22, 2022

விந்தன் சிறுகதைகள் – 17

நாத்தனார் “அன்னம்மா! இந்த அதிசயத்தைக் கேட்டியா? என்னமோ எங்க வீட்டுக்காரி ரெண்டு மாசமா முழுகாம இருக்காளாம். அதுக்கு அவ பண்ணுற அட்டகாசத்தைப் பார்த்தா எனக்கு என்னமாத்தான் இருக்குது, தெரியுமா? தலையைச் சுத்தறதாம், மயக்கம் வரதாம், வாந்தி வரதாம் இன்னும் என்னவெல்லாமோ சொல்றா; ஏன்னா, வீட்டு வேலையைச் செய்வதற்கு நான் ஒருத்தி இருக்கிறேனோ இல்லையோ?” என்றாள் கங்கம்மா. “என்னம்மோ அறியாதது! உன்னுடைய குழந்தை மாதிரி நினைச்சுக்கிட்டுப் போயேன்!” என்றாள் அன்னம்மா. “போயும் போயும் நான் உங்கிட்டெ நியாயம் கேட்க…

“சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படத்திற்கு விருது கொரிய தமிழ்ச் சங்கம் வாழ்த்து

திரு. அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் இயக்கி சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள “சாட் பூட் த்ரி” தமிழ் திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப்பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) வழங்கப்பட்டது. விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. அருணாச்சலம்…

இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு – 4 – ராதா மனோகர்

ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம் மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம் கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும் அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம் நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம் எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன். உமது தகப்பனார் அங்கே…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 3 – ஆதனூர் சோழன்

குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? பள்ளிக்கூட பஸ்ஸிலிருந்து இறங்கினான் சரண். மகனிடமிருந்து பேக்கை வாங்கித் தோளில் போட்டாள் சரஸ்வதி. பிறகு அவனை இடுப்பில் தூக்கி வைத்து நடந்தாள். அவ்வளவுதான். “அம்மா இனிமேல் திவ்யா பக்கத்தில் நான் உக்கார மாட்டேன். எப்பப் பார்த்தாலும் கிள்ளிக்கிட்டே இருக்கா. தருண்கிட்ட இன்னிக்கு நான் “கா” விட்டுட்டேன். வசந்தி டீச்சர் ரொம்ப மோசம்…” சரண் அடுக்கிக் கொண்டே போனான். சரஸ்வதிக்கு அவனுடைய பேச்சில் கவனம் இல்லை. வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கிறது. அதைப்போய்…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 14 – விந்தன்

14. ‘இழந்த காத’லில் சிவாஜி “யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பெனி அப்போ பரமக்குடியிலே இருந்தது. அதை அங்கிருந்து கொண்டு போய்ச் சேர்க்க முதல்லே ஒரு இடத்தை ஏற்பாடு செஞ்சிக்க வேண்டாமா? அதுக்காகச் சேலத்துக்கு வந்து ‘ஓரியண்டல் தியேட்டர் மருதப்பிள்ளை’யைப் பார்த்தோம். அவர் கிட்டே விஷயத்தைச் சொல்லி, தியேட்டரிலே இடம் நாடகம் நடத்த ஓரியண்டல் கொடுக்க வேணும்னும், நாடகச் சாமானுங்க ரயில்வே வேக்கின்லே வந்து இறங்கறப்போ அதை எடுக்க ஐந்நூறு ரூபா கடனாக் கொடுத்து கேட்டுக்கிட்டோம். அவர்…

சிந்தனைக் களம் 17 – Bamini Rajeswaramudaliyar

பயம் மனிதர்களை முன்னேற விடுவதில்லை அதுவே முயற்சிக்கு தடைக்கல்லாகும். முயற்சி இன்றி நல்ல பாதைக்கான கதவுகள் திறப்பதில்லை. புதிய கதவுகள் திறக்காத போது, ஆக்கத்திற்கான எண்ணங்கள் வந்து வந்து மழுங்கிப் போக, பழைய சிந்தனையுடனான வாழ்க்கை சாக்கடைபோல் மாறத் தொடங்கும். அங்கேதான் மனநோய்கள் போட்டி பொறாமைகள் ஆரம்பமாகிறது. அவைகள் உடல் உபாதைகளை தர ஆரம்பிக்கும். அதுவே அவர்களை நோயாளராக்கும். துரோகமான செயல்களை தனக்குத்தான் அல்லது பிறருக்கு செய்யவே அஞ்ச வேண்டுமே தவிர தனக்கு முன்னேற்றம் தரும் விடையங்களை…

வாழ்வியல் சிந்தனைகள் – 33 – ராதா மனோகர்

பழைய கோட்பாட்டு மயக்கம்? பழமை என்பதாலேயே அவை புனிதம் அல்ல! பழமையான தத்துவங்கள் பழமையான கோட்பாடுகள் எல்லாமே மிகவும் புனிதமானவை போற்றுதற்கு உரியவை. ஒரு போதும் அந்த பழமையான தத்துவங்களை நாம் கைவிடவே கூடாது. சனாதன தர்மங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அற்புத கருத்துக்கள் ஆகும். இதுதான் நமக்கு காலகாலமாக இந்த சமூகமும் சமயமும் நமக்கு கற்று தந்திருக்கும் பாடம். இது மிகவும் பிற்போக்கு தனமான ஒரு பாடமாகும். சனாதனம் என்றாலே கைகூப்பி தொழவேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால்லாம்…