Daily Archives: October 25, 2022

ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானது எப்படி? – Fazil Freeman Ali

இங்கிலாந்து ஒரு சுவார‌ஸ்ய‌மான‌ அர‌சிய‌ல் சூழ‌லில் த‌வ‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து… ம‌த‌ அடையாள‌த்தோடு ம‌ட்டுமே ம‌னித‌ர்க‌ளை இன‌ம் காண்ப‌வ‌ர்க‌ளின் பார்வையில் சொல்வ‌தென்றால், “ஒரு இஸ்லாமிய‌ர் சாதிக் கான் (Sadiq Khan) ல‌ண்ட‌னின் மேய‌ராக‌ இருக்க‌, ரிஷி சுன‌க் (Rishi Sunak) என்ற‌ இந்து இங்கிலாந்தின் பிர‌த‌ம‌ அமைச்ச‌ராகிறார்” (ப‌ட‌த்தில் இவ்விருவ‌ரும்) பெரும்பான்மை கிருஸ்த‌வ‌ர்க‌ள் அதுவும் வெள்ளைக்கார‌ கிருஸ்த‌வ‌ர்க‌ள் வாழும் நாட்டில் இது எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து..? ப‌தில் மிக‌ எளிமையான‌து; இங்குள்ள‌ ம‌க்க‌ளில் பெரும்பாலானோர் ம‌த‌த்தை ஒருவ‌ருடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ விருப்ப‌மாக‌,…

வாழ்வின் வண்ணங்கள் – 18 – கை.அறிவழகன்

அலுவலகத்தின் உணவு மேசை மொட்டை மாடியில் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பாக காலையிலும், பகலிலும் சாப்பிடப் போகும் போது ஒரு வயதான அலகு முறிந்த காகம் சுற்றுச் சுவரில் வந்து அமர்ந்து கூச்சலிடும். பறப்பதும், இயல்பாக சாப்பிடுவதும் சவாலாக மாறிப் போன காக்கை அது. பொதுவாகவே மனிதர்களை அண்டிப் பிழைக்கிற காக்கைகள் நகர்ப்புறங்களில் அதிகரித்து பிரியாணி போன்ற சுவையான உணவு சாப்பிடப் பழகி விட்டன. காக்கையின் கூச்சல் அதிகரிக்கும் போது கூடவே நானும் கூச்சலிடுவேன், கத்தாம இருந்தா…

விந்தன் சிறுகதைகள் – 18

உறவினர் எதற்கு? “அவனன்றி என்கிறார்கள். ஓரணுவும் அசையாது!’’ அப்படியானால், இந்த அகண்டாகார உலகத்தில் அவ்வப்போது நடக்கும் அநீதி, அக்கிரமங்களுக்கெல்லாம் அவனே ஜவாப்தாரி யாகிறான் அல்லவா? ஆனால், தண்டனை மட்டும் அவனுக்கு இல்லையாம்; அவனால் ஏவப்பட்ட மனிதர்களுக்குத் தானாம்! – இதென்ன வேடிக்கை! இப்படி அதிசயத்துக்கு ஆளாகி, ஆண்டவனைப் பற்றி ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்குக் கிடைக்கும் பதில் இதுதான்: “அவனுடைய லீலா விநோதங்கள் அற்பர்களாகிய நமக்குப் புரியாதவை!’’ அது எப்படியாவது போகட்டும்; ஒரே ஒரு விஷயத்தில்…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 4 – ஆதனூர் சோழன்

இலக்கை தீர்மானியுங்கள் குழந்தையை படிக்க வைப்பது ஒரு இலக்கு நோக்கித்தான். நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது ஒரு இலக்கு. பொறியியல், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், நீதிமன்றம், அரசு வேலை, ஆசிரியர் என்று எத்தனையோ இலக்குகள். ஒவ்வொரு இலக்குக்கும் ஒவ்வொரு படிப்பு. குழந்தையை எந்த படிப்பு படிக்க வைப்பது? எந்த தொழிலில் ஈடுபடுத்துவது? போன்ற இலக்குகளை குழந்தைக்காக பெற்றோர்களாகிய நாம்தான் தீர்மானிக்கிறோம். அப்படி தீர்மானித்து, அந்த இலக்கை நோக்கி குழந்தையை செலுத்துவது நமது கடமை. ஆனால்,…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 15 – விந்தன்

15. என்.எஸ்.கே. எதிரியானார் “சில நாடகங்களும் சினிமாப் படங்களும் இந்தக் காலத்திலேதானா வெள்ளி விழாவும் பொன் கொண்டாடுது? காலத்திலேயும் விழாவும் கொண்டாடிக் அந்தக் கிட்டுத்தான் இருந்தது. சேலம் ஒரியண்டல் தியேட்டர்ஸிலே ‘இழந்த காதல்’ நாடகம் ‘நூறாவது நாள் விழா’ கொண்டாடி, அதுக்கு மேலேயும் நடந்துக்கிட்டிருந்தது. அந்த நாடகத்தைப் படமாக்க மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், சாரங்கபாணி அண்ணன் எல்லாரும் வந்து பார்த்தாங்க. அவங்களுக்குக் கதை பிடிச்சிருந்தது; அதிலே நடிச்ச மாரியப்பனைத் தவிர மற்றவங்க எல்லாரையும் பிடிச்சிருந்தது….” “மாரியப்பனை ஏன்…

சிந்தனைக் களம் 18 – Bamini Rajeswaramudaliyar

மனிதராக பிறந்தவர்கள் தவறு விடுவது இயற்கை. அதனை உணராமல் தாம் தவறு செய்துவிட்டோம் என தம்மைத்தாம் தண்டிப்பவர்கள் மனநோயாளர்களாக மாறுகிறார்கள். அடுத்தவரின் வாழ்வை கெடுப்பது போல் அநியாயங்களை செய்வது தவறு. பதுமை வயது முதல் தமது உணர்வின் உந்தலால் செய்யும் செய்கைகளை சாத்தான் என்றும் கேவலம் என்றும் குற்றமனப்பான்மையை உருவாக்கி, தம்மைத்தாம் தவறாக எண்ண வைப்பது மனநோய்களை உருவாக்குவதற்கான முதல் காரணமாகும். பெற்றோர்களானதும் பலர் தமது இளமைக்காலத்தை மறந்துவிடுகிறார்கள் என ஒரு சகோதரியின் ஆக்கத்தில் படித்தேன். உண்மைதான்!…

நேரம் நல்ல நேரம் – 3 – ஆதனூர் சோழன்

விடலைப்பருவம் வீடு முழுக்க அமைதி, அமைதி! ஒரு பிரளயம் ஓய்ந்த பிறகு உணருவோமே, அதுபோலவொரு அமைதி. வீட்டுத் தலைவர் முகம் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தார். அழுது அழுது வீங்கிய முகத்துடன், கண்ணீர் கோடுகள் உப்புப் பொறிந்து, ஒடுங்கிப் போய் சுவரோரம் படுத்திருந்தாள் அம்மா! கலைந்த தலையுடன், பாவம் அந்த சின்னப்பொண்ணு. பிரமை பிடித்தாற்போல குத்த வைத்திருந்தாள். பாசமான அம்மா அப்பாவுக்கு இப்படியொரு வேதனையை கொடுத்து விட்டோமே என்று அவள தேம்பிக் கொண்டிருந்தாள். ரேவதிக்கு 17 வயதுதான் ஆகிறது.…